‘இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்’! அமரன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

நாளை மறுநாள் வெளியாகவுள்ள 'அமரன்' படம் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Amaran Sivakarthikeyan

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நாளை மறுநாள் அதாவது தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு என்பதால் அமரன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

இந்நிலையில், நேற்று அமரன் திரைப்படம் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில், படத்தின் ஷூட்டிங்கின் போது, ஏற்பட்ட அனுபவங்களைக் குறித்து சிவகார்த்திகேயன் பேசி இருந்தார். மேலும், படத்தின் போது தங்களுக்கு உதவியாய் இருந்த இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்தும் பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், “ராணுவதில் மேஜர் முகுந்த் செய்த சாதனைகளுக்காக மட்டுமே நான் இந்த படத்தில் நடிக்கவில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய கேரக்டர் என்பது மிகச் சிறந்ததாகும். ஒரு தலைவராக குடும்பத்தையும், ராணுவக் குழுவையும் சமமாகவே கையாண்டார். அது எனக்கு மிகவும் பிடித்தது.

மேலும், இரவு வேளையில் பதற்றமான இடத்தில் ஷூட்டிங்கின் போது இந்திய ராணுவ வீரர்கள் எங்களைச் சுற்றி நின்று பாதுகாப்பு கொடுத்து ஒத்துழைத்தனர். மூன்று மாதம் அங்கு ஷூட்டிங் செய்தோம், அவர்களால், நாங்கள் நினைத்ததை நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் எடுக்க முடிந்தது.

இதனால், எங்களுக்கு அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்”, என சிவகார்த்திகேயன் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்