அழகான குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து, மகனுக்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.!
மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் 2013ல் மகள் ஆராதனாவை பெற்று பெற்றோர் ஆனார்கள். கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மகன் பிறந்தான். மகனுக்கு மறைந்த தனது தந்தை தாஸின் நினைவாக ‘குகன் தாஸ்’ என பெயரிட்டார்.
இன்று குகன் தாஸூக்கு முதல் பிறந்தநாளாகும். இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சில கியூட் ஆன புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தற்போது, புகைப்படங்களை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் குகன் தாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதிஷங்கர் நடித்துள்ளார். யோகிபாபு, மிஸ்கின், மோனிஷா, சரிதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.