டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில், கடைசியாக வெளியான டாக்டர் படத்தில் கூட அதிகமாக டயலாக் பேசியிருக்க மாட்டார். முகத்தில் பெரிய பாவனைகள் செய்திருக்க மாட்டார். வித்தியாசமான கதைக்களத்தை வித்தியாசமாக நடித்து முடித்து இருப்பார். அந்த படம் படக்குழு நினைத்ததை விட பெரிய வெற்றியை பெற்றது.
பல தியேட்டர்களில் புதிய படம் அதுவும் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த வந்துவிட்டதே என படத்தை தூக்கும் நிலை வந்தது என பல தியேட்டர் அதிபர்கள் கூறினார்களாம். அந்தளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை டாக்டர் பெற்றுக்கொடுத்துள்ளது.
அதனால், தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளாராம் சிவகார்த்திகேயன். 27 கோடியாக இருந்த தனது சம்பளத்தை 35 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
இதனை பார்த்து அதிர்ந்த சத்ய ஜோதி பிலிம்ஸ். காரணம் சிவாவை வைத்து அடுத்த படம் தயாரிக்க சத்ய ஜோதி விரும்பியது. பின்னர் சிவகார்த்திகேயனிடம் பேசி, 35 கோடி சம்பளத்தை 30ஆக குறைத்து ஃபைனல் செய்துள்ளார். சத்ய ஜோதிக்கு மட்டும் தான் இந்த இரக்கம். ஏனென்றால் அவர்கள் டாக்டருக்கு முன்கூட்டியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனராம். அதற்கடுத்து வரும் தயாரிப்பாளர்களிடம் 35 கோடி கேட்க தயாராக இருக்கிறதாம் சிவகார்த்திகேயன் தரப்பு.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…