நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் அட்லீ இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன ராஜா ராணி படத்தில் கூட முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார்.
பிறகு சில காரணங்களால் அவரால் ராஜா ராணி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த படம் மிஸ் ஆனால் என்ன மீண்டும் சிவகார்த்திகேயன் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே தகவல் வந்து கொண்டு இருக்கிறது.
படங்கள் பற்றிய கதை ஒரு பக்கம் இருந்தாலும் அட்லீ இயக்கும் படங்கள் எல்லாம் அவர் காட்சிகள் இந்த படத்தினுடைய காப்பி அந்த படத்தினுடைய காப்பி என்று விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கும். அந்த விமர்சனங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சற்று காட்டத்துடன் பதில் அளித்து இருக்கிறார்.
என்னோட டாட்டூக்கு இதுதாங்க அர்த்தம்! மனம் திறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
இது பற்றி பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் ” ஜவான் ட்ரைலரை பார்த்த பிறகு நான் அட்லீக்கு சொன்ன ஒரே விஷயம் இனிமேல் நீ தமிழுக்கு வரவே முடியாது உன்னை பாலிவுட்டில் தூக்கி கொண்டாடி விடுவார்கள். இந்த படம் அவர்களுக்கு பார்க்கும் போது புதிதாக இருக்கும். கண்டிப்பாக படம் பெரிய ஹிட் ஆகும் என்று சொன்னேன்.
படமும் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. அந்த அளவிற்கு அட்லீ சாதித்து இருக்கிறார். “அட்லியை ஈசியா விமர்சிக்குறாங்க ஆனால் எனக்கு ரொம்பவே வருத்தம் அது அவனை இன்னும் நாம் கொண்டாட வேண்டும். அவரை போல மற்ற மொழிகள் இயக்குனர்கள் வெற்றிக்கொடுத்தால் கொண்டாடுகிறார்கள்.
அதைப்போலவே நாம் அட்லீயை கொண்டாடவேண்டும். தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து படம் இயக்கி 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் படத்தை கொடுக்கிறான் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. எனவே விமர்சிப்பதை நிறுத்திவிட்டு கொண்டாடவேண்டும்” எனவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…