நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றன.
இதையும் படியுங்களேன்- மொத்த கவர்ச்சியையும் வெளிச்சம் போட்டு காட்டிய பூஜா ஹெக்டே.! கலக்கல் போட்டோஸ் இதோ…
இந்த நிலையில் படம் பார்த்த பலரும் நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறிய விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “பிரின்ஸ் திரைப்படம் கொஞ்சம் வேடிக்கையும், சிரிப்பும்.சில ஜோக்குகள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் போர்ஷன்கள் நன்றாக இருந்தது. சிவகார்த்திகேயனின் நடனம் சூப்பராக இருந்தத 2வது பாதி மெதுவாக இருக்கிறது . கிளைமாக்ஸ் காட்சிகள் நன்றாக இல்லை என பதிவிட்டுள்ளார்”
மற்றோருவர் ” பிரின்ஸ் முதல் பாதி ஒன் லைனர் காமெடிகளுடன் நன்றாக சென்று நல்ல சிரிப்பை உண்டாக்குகிறது2வது பாதியும் கொஞ்சம் மெதுவான கதையுடன் நன்றாக செல்கிறது தர்க்கத்தை ஒதுக்கி வைத்து ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல பொழுதுபோக்கு, வேடிக்கை நிறைந்த தீபாவளி விருந்து” என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒருவர் பிரின்ஸ் படம் பிடிக்கவில்லை என்பதால் எதுவும் பலனளிக்கவில்லை, சிவகார்த்திகேயனிடம் இருந்து ஒரு பெரிய ஏமாற்றம்.மிஸ்டர் லோக்கல் 2 என்று இந்த படத்தை அழைக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…