மீண்டும் சிவகார்திகேயனுடன் இணைய மறுக்கும் டாக்டர் நாயகி.! என்ன விஷயம் தெரியுமா.?
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் – தெலுங்கு திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லையாம். ப்ரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பலமாக கால்பதிக்க வேண்டும் என நினைத்துவிட்டார்.தெலுங்கு நடிகர்கள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பது போல, விஜய், தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் என வரிசைகட்டி தெலுங்கு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.
ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளதாம்.
இப்படத்தில் சத்யராஜ், பிரேம் ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனராம். ஆனால், இப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் கிடைக்கவில்லையாம். டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா மோகனிடம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க படக்குழு கேட்டுள்ளதாம்.
ஆனால், அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம். இதற்கு காரணமாக, பிரியங்கா மோகன் தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிப்ரவரி மாதம் வெளியாகும் இந்த திரைப்படம் வெற்றியடைந்தால் சம்பளத்தை ஏற்றிவிடலாம் என எந்த படத்திற்கும் தற்போது வரையில் புதியதாக ஓகே சொல்லவில்லையாம்.
மற்ற நடிகர்களின் படங்களுக்கு ஓகே சொல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழில் அறிமுகப்படுத்தி டாக்டர், டான் என இரு படங்களில் ஹீரோயினாக்கிய சிவகார்திகேயனுக்கே ஓகே சொல்லவில்லையே என சினிமா வட்டாரவாசிகள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.