தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று MR லோக்கல் திரைப்படம் வெளியானது. ராஜேஷ் இயக்கிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தை அடுத்து இன்னும் 4 படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதில் முதல் படம் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படம். இப்படம் இரும்புத்திரை போல சமூக கருத்துள்ள திரைப்படமாக உருவாகி வருகிறது..
அடுத்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இயக்குனரின் முந்தைய படம் போல அறிவியல் சார்ந்த படமாக உருவாக உள்ளதாம். அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உடன் நடிக்க உள்ளனர்.
அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்க நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் காதல் படமாக உருவாக உள்ளது. ஆதலால் அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு திரை விருந்தளிக்க சிவகார்த்திகேயன் தயாராகி வருகிறார் என தெரிகிறது.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…