வெளிநாட்டுக்கு தப்பிக்க போன கேமராமேனை பிடித்துவிட்டேன்! சிவகார்த்திகேயன் பட இயக்குனர் டிவிட்டரில் கலாட்டா!

சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஒருபடம், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இதில் ஹீரோ பட இயக்குனர் மித்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சிவானா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றவரை பிடித்துவிட்டேன் சீக்கிரம் வாங்க படப்பிடிப்புக்கு போலாம் என கூறினார்.
அதற்கு சிவகார்த்திகேயன், ‘ அப்படி சொல்லிவிட்டு நீங்க வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று விடுவீர்கள்’ என கூற,
அதற்குள் இயக்குனர் ரவிக்குமார் ‘ இரண்டு பேரும் கூட்டு களவாணிகள்’ என அவர் பதிவிட,
ரசிகர்கள் அப்டேட் கேக்க டிவிட்டர் டேக் இயக்குனர் பாண்டிராஜ் பக்கம் திரும்பியது. அதற்க்கு அவர் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இரண்டு வாரத்தில் முதல் போஸ்டரை வெளியிட்டு விடுவேன் என கூறி அந்த கலாட்டாவை முடித்துவைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025