சிவகார்த்திகேயன் படத்தில் பிரேம்ஜிக்கு முக்கிய கதாபாத்திரமா.?! எல்லாம் மாநாட்டின் மகிமை.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு – தமிழ் என இருமொழிபடமாக உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரேம் ஜியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
சில விஷயங்களை தமிழ் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது. அப்படி பிரித்தாலும் அது ரசிகர்கள் ரசிக்கும் படி அமைவது கடினம். அப்படி சில கூட்டணிகள் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் ஒரு கூட்டணி தான் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் ஹீரோ நண்பர் கதாபாத்திரத்தில் பிரேம் ஜி நடிப்பது.
அண்ணன் வெங்கட் பிரபு படைகளை தவிர பெரும்பாலும் வேறு படங்களில் பிரேம் ஜி நடிப்பதில்லை. அப்படி நடித்தாலும் அந்த படம் பெரிய வரவேற்பு பெறுவதில்லை. அப்படி, கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் பிளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்த மாநாட்டில் அதிக நேரம் வராவிட்டாலும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம் ஜி நடித்திருந்தார்.
தற்போது வெளியான தகவலின் படி, சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதிப் என்பவரது இயக்கத்தில் தமிழ் – தெலுங்கு என இருமொழிபடமாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கிட்டத்தட்ட ஹீரோக்கு அடுத்தபடியான கதாபாத்திரமான அதில் பிரேம் ஜியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
வெங்கட் பிரபு அடுத்த படம் ஏதும் தற்சமயம் அறிவிக்கவில்லை என்பதால், நிச்சயம் சிவகார்த்திகேயன் படத்தில் பிரேம்ஜி இருப்பார் என கூறப்படுகிறது. விரைவில் அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025