இந்திய அளவில் தவிர்க்க முடியாத ஹீரோ சிவகார்த்திகேயன்.! டான் நடிகரின் உச்சகட்ட புகழ்ச்சி.!

சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி, சூரி, மனோ பாலா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில், நடைபெற்றது . அதில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் பேசிய சமுத்ரகனி ” என்னை பார்ப்பது போல தான் சிவகார்த்திகேயனை பார்க்கிறேன். ஒவ்வொரு முறை சிவாவை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கு.
நான் பட்ட வலிகள், நான் கடந்து வந்த பாதை இதை அவன் எவ்வளவு பட்டிருப்பார் எந்தெந்த பக்கத்தில் வாங்கியிருப்பான் அப்படின்னு.. சிவா டான் படம் மிகப்பெரிய வெற்றியடையும். நம் தேசம் மட்டுமல்ல, இந்திய தேசத்திலேயே தவிர்க்க முடியாத நடிகனாக வந்து நிப்ப. இறைவனை பிராத்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025