ஐயோ முடியல சார்…கதறும் சிவகார்த்திகேயன்! மாவீரன் படத்திற்காக பட்ட கஷ்டங்களை பாருங்க!

மாவீரன் படத்திற்காக தயாராகும் போது சிவகார்த்திகேயன் தனது மகனுடன் உடற்பயிற்சி செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.

Maaveeran sk

சென்னை : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக மாறியது. படத்தில் அவருடைய நடிப்பும் சாய்பல்லவி உடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு படம் ட்ரெண்டானது என்றே சொல்லலாம்.

படத்திற்காக இதுவரை இல்லாத வகையில் சிவகார்த்திகேயன் தனது உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு நடித்தார். குறிப்பாக அதற்கு முந்தைய படமான மாவீரன் படத்தில் நடிக்கும் போது அவருடைய உடல் எடை மிகவும் குறைந்திருந்தது. இதனை பார்த்த பலரும் இவருக்கு என்னதான் ஆச்சு என்பது போல கேள்விகளை எழுப்ப தொடங்கினர். அதன்பிறகு அது மாவீரன் படத்திற்காக வைக்கப்பட்ட கெட்டப் என்பதும் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து அடுத்ததாக அமரன் திரைப்படத்திற்கு அவர் தன் உடல் எடையை அதிகரிக்க உடற்பயிற்சி பயிற்சி செய்ய வேண்டும் என இயக்குனர் கட்டளை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த மாவீரன் படகில் நடித்தபோது வைத்திருந்த உடலில் இருந்து சிவகார்த்திகேயன் மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் அமைப்பை அமரன் படத்திற்காக மாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவில் அவர் கடினமாக உடற்பயிற்சி செய்வதும் ஒரு கட்டத்தில் முடியாமல் சோர்ந்து போய் பிறகும் மீண்டும் பயிற்சி செய்து போல காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. அத்துடன் அவர் தனது மகனே பின்புறம் அமர வைத்துக் கொண்டு புஷ் -அப் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ பார்த்த பலரும் அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்