ரஜினிக்கு மகனாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்.!? இதுதான் ஹாட் டாப்பிக்.!

ரஜினியின் 169-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 169 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகரும் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பருமான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனையடுத்து தற்போது பரவும் தகவல் என்னவென்றால், தலைவர் 169-படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினிக்கு மகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி& சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025