அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன்.!

Amaran sk

அமரன்: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அமரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதால், படக்குழுவுக்கு விருந்து அளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது, தற்போது ‘அமரன்’ படப்பிடிப்பில் இருந்து ஒரு புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்களில் முடிவடையும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

மூன்று நாள் பாடல் படப்பிடிப்பிற்குப் பிறகு படம் முழுவதுமாக முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு தளத்தில், படக்குழுவினர் அனைவருக்கும் தனது கையாலேயே பிரியாணி பரிமாறினார்.

இப்படம், வரும் ஆக. 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது, மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ஆம், 2014-ம் ஆண்டு ஷோபியான் என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் போரிட்டபோது உயிரிழந்த மேஜர் முகுந்த் வர்தராஜன் வாழ்க்கை வரலாற்று கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகை சாய் பல்லவி அவரது மனைவியாக நடித்துள்ளார். இதுவரை இல்லாத காம்போவாக இது இருக்கும். மேலும் படத்தில் சிவகார்த்திகேயனை தவிர்த்து, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஹனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான் மற்றும் கௌரவ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்