sivakarthikeyan [FILE IMAGE]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் நடைபெறாத காரணம் இதுதான்! உண்மையை உடைத்த பிரபலம்!
இதற்கிடையில், அயலான் படத்தின் முதல் நாள் முதல்காட்சியை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது அயலான் படம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மக்களுக்கு புது விதமான ஒரு அனுபவத்தை இந்த படம் மூலம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தோம்.
இந்த படத்தை பார்க்கும் போது கண்டிப்பாக அனைவர்க்கும் படம் பிடிக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் வெளியே செல்லவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக நம்பி அயலான் படத்திற்கு வருகை தரலாம். கண்டிப்பாக படம் அவர்களுக்கு பிடிக்கும்.
இந்த மாதிரி நம்ம தமிழ் சினிமாவில் படம் எடுப்பது மிகவும் குறைவு எனவே, அந்த மாதிரி ஒரு வகையை சேர்ந்த படத்தை தேர்வு செய்து நடித்தது எனக்கும் மிகவும் புது அனுபவமாக இருந்தது. படம் வந்துவிட்டது படத்தை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் தான் சொல்லவேண்டும். நம்பி படத்திற்கு வாருங்கள் சந்தோசமாக செல்லுங்கள்” எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…