இப்படி செஞ்சு தான் உடல் எடையை குறைத்தேன்! சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்!

sivakarthikeyan

Sivakarthikeyan  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல படத்தில் வரும் பிளாஸ் பேக் காட்சிகாகவும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து இருந்தார். கண்ணாடி முன்னாடி இருந்தபடி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்களும் அந்த சமயம் வெளியாகி இருந்தது.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

அந்த லூக்கை பார்த்த பலரும் சிவகார்திகேயனா இது? அதற்குள் எப்படி இப்படி உடல் எடையை குறைத்தார்? என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது உடல் எடையை குறைத்து எப்படி என்பதற்கான ரகசியத்தை உடைத்துள்ளார்.

read more- குட் பேட் அக்லி நான் எடுத்தா இவுங்களுக்கு இந்த ரோல் தான்! வெங்கட் பிரபு ஓபன் டாக்!

உடல் எடை குறித்தது பற்றி பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் ” உடல் எடையை குறைப்பது கடினமான வேலை எல்லாம் இல்லை. நான் என்னுடைய உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் மற்றும் மீன் எடுத்துக்கொண்டேன். மீன் என்றால் எண்ணையில் போட்டு பொறித்த மீன் இல்லை குழம்பில் வேக வைத்த மீன். இந்த இரண்டு விஷயங்களை மட்டுமே நான் பலோவ் செய்து வந்ததால் என்னுடைய உடல் கணிசமாக குறைந்தது.

read more- பட வாய்ப்பு போனதற்கு காரணமே அவன் தான்! வேதனையில் பகீர் தகவலை சொன்ன கிரண்!

அதைப்போல மீண்டும் உடல் எடையை அதிகப்படுத்த வேண்டும் என்பதால் மீண்டும் சிக்கன் மற்றும் முட்டை வகைகளை எடுத்துக்கொண்டேன்” என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும், அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கியுள்ளார். படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்