சம்பளம் இப்போ வேண்டாம்! வெங்கட் பிரபு படத்திற்கு சிவகார்த்திகேயன் போட்ட மாஸ்டர் பிளான்?
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவருமே ஒரு படத்தில் இணையை இருந்தார்கள். இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவே பல பேட்டிகளும் அறிவித்து இருந்தார். ஆனால், இன்னும் இவர்கள் இணையும் படத்திற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. எனவே. எப்போது அந்த அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்!
இதற்கிடையில் அவர்கள் இருவரும் இணையவுள்ள படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து தான் படம் இயக்க போகிறாராம்.
read more- நான் ‘அம்மாவாக ஆசை படுகிறேன்’! பொன்னியின் செல்வன் நடிகை ஓபன் டாக்!
இவர்கள் இருவரும் இணையும் அந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். இதுவரை சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் உருவாகாத வகையில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கான பேச்சுவார்த்தை தான் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறதாம்.
read more- விண்ணை தாண்டி வருவாயா ‘வாய்ப்பு போச்சு ரொம்ப நொந்துட்டேன்’- ஜனனி வேதனை!
இந்த படத்தில் நடிக்க சம்பளம் பேசும் விஷயத்தில் சிவகார்த்திகேயன் இப்போது சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டு சம்பளத்தை அதன்பிறகு பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். இவ்வளவு வேண்டும் அவ்வளவு வேண்டும் என்று கூறாமல் சம்பளத்தை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வெளியானால் நமக்கு நல்ல மார்கெட் இன்னுமே உயரும் என்பதால் கூட சிவகார்த்திகேயன் அந்த சமயம் சம்பளத்தை அதிகமாக கேட்க திட்டமிட்டு பிளான் போட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.