குக் வித் கோமாளிக்கு சென்ற சிவகார்த்திகேயன்.! வைரலாகும் புகைப்படம்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு, பெரிய படங்கள் வெளியானால் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர்கள், நடிகைகள் வருவது வழக்கமான ஒன்று தான் அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹேய் சினாமிகா பட ப்ரோமோஷனுக்காக துல்கர் சல்மான் வந்ததிருந்தார்.
அவரை தொடர்ந்து இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு டான் பட ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்திகேயன் படக்குழுவினருடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது .
விரைவில் சிவகார்திகேயன் வந்ததற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றபோது சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மேலும், டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில், ப்ரியங்கா, எஸ்.ஜே.சூர்யா, சூரி, ஷிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்