கமல்ஹாசனை பாலோவ் செய்யும் சிவகார்த்திகேயன்.! ‘SK21’ படத்தின் புத்தம் புது அப்டேட்.!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இருந்தும் இன்னும் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த படம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.
படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் காஷ்மீர் சென்று ராணுவ பயிற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் ஆளவந்தான் திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக ராணுவ பயிற்சிக்கு சென்றிருந்தார். அவரை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனும் கமலை பலோவ் செய்து ராணுவ பயிற்சிக்கு செல்கிறார்.