அடுத்தடுத்த அப்டேட்ஸ்.! திக்குமுக்காடி நிற்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அதற்கான ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தொடர்ந்து. அடுத்த அப்டேட்டாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்திற்கான ஒரு புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தை தயாரிக்கவுள்ள ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

டான் படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் வெளியாவதால் உற்சாகத்தில் உள்ளனர். சிவகார்திகேயனினின் 21-வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தை, ராஜ் கமல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். விரைவில் இதற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்