பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய சிவகார்த்திகேயன்! காரணம் என்ன தெரியுமா?
அமரன் படம் எமோஷனலான படமாக இருக்கும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மும்மரமாக ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கும் நிலையில், திடீரென வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்த ப்ரோமோவை வெளியீட்டு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை உயர்த்தியுள்ளது. திடீரென எஸ்கே வீட்டிற்குள் வந்த காரணமே அமரன் படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காகத் தான்.
அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் காரணத்தால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாகத் தான் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு அங்கிருந்த போட்டியாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். வீட்டிற்குள் தாங்கள் வைத்து இருக்கும் விஷயங்களையும் சிவகார்த்திகேயனுக்குப் பரிசாக வழங்கினார்கள்.
அத்துடன் சிவகார்த்திகேயன் அமரன் என எழுதப்பட்டு இருக்கும் கேக் ஒன்றையும் வெட்டி நிகழ்ச்சியிலிருந்த அனைவருக்கும் ஊட்டிவிட்டார். பிறகு அங்கிருந்த போட்டியாளர்கள் அமரன் படம் எந்த மாதிரி ஒரு படம்? எனக் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்குப் பதில் அளித்த சிவகார்த்திகேயன் அமரன் படம் எமோஷனலை அப்படியே எடுத்துக்காட்டும் ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும்” எனக் கூறினார்.
சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காரணத்தால் இந்த வாரம் கண்டிப்பாக விஜய் டிவியின் டிஆர்பி எகிறப்போகிறது என அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அவர் கலந்துகொண்ட அந்த ப்ரோமோவும் தற்போது வைரலாகி வருகிறது.
#Sivakarthikeyan Promoting #Amaran At #BiggBoss8Tamil ????
pic.twitter.com/s8erKJiyKR— Saloon Kada Shanmugam (@saloon_kada) October 25, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025