சைலண்டாக பெரிய உதவிகளை செய்யும் சிவகார்த்திகேயன்! குவியும் பாராட்டுக்கள்!
சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி பல உதவிகளையும் வெளியில் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளியே தெரியாமல் செய்த உதவிகளுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில் அவர் உதவி செய்த விஷயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் வசந்தபாலனுக்கு போன் செய்து சார் உங்களுக்கு எதாவது பண உதவி வேண்டுமா என்று கேட்டாராம். ஆனால், வசந்தபாலன் போட்டிருந்த காரணத்தால் உதவி வேண்டாம் நீங்கள் கேட்டதே மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று கூறிவிட்டாராம்.
அதைப்போல, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான ராசு மதுரவன் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் உதவி செய்து வருகிறார். ராசு மதுரவன் உடல்நல குறைவு காரணமாக 2013-ஆம் ஆண்டு காலமானார்.
கணவர் ராசு மதுரவன் உயிரிழந்த பிறகு அவருடைய மனைவி பவானி மிகவும் கஷ்ட்டப்படுவதாகவும் தன்னுடைய இரண்டு மகள்களான நெசிகா, அனிஷ்கா இருவரையும் படிக்க வைக்க ரொம்ப சிரமை படுவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவர்களுடைய படப்பிடிப்பு செலவை தான் ஏற்றுகொல்வதாக கூறி சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் செய்து வரும் இந்த உதவிகளுக்கு இயக்குனர் வசந்த பாலன், கரு பழனியப்பன் இருவரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். வசந்த பாலன் தனது சமூக வலைதள பக்கங்களில் “2021 ம் ஆண்டு கொரோனா இரண்டாவது அலையில் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து பலரும் திரையுலகில் உதவ முன் வந்தனர்.அவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். பணம் தேவையா என்று கேட்டதே பெரும் மகிழ்ச்சி சார் .
நான் மெடிகிளைம் பாலிசி போட்டிருந்ததால் அதுவே கவராகி விட்டது என்று நன்றி கூறினேன். ராசு மதுரவன் போன்று நானும் அவரோடு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாதன். ஏற்ற தாழ்வுக் கொண்ட பொருளாதார கட்டமைப்பை அன்பின் தேர் தான் வழி நடத்தி செல்கிறது. சிவா அவர்களுக்கு நன்றி” என்று கூறியிருந்தார்.
அவரை தொடர்ந்து இயக்குனர் கரு பழனியப்பன் “மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் மனைவி சமீபத்தில் உங்களுக்கு நன்றி கூறியிருந்தார். அவரின் பிள்ளைகளின் படிப்புச் செலவை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக, உங்களுக்கு நன்றி கூறி இருந்தார். செய்தி அறிந்த பலரைப் போல நானும் நெகிழ்ந்தேன்” என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள்.