சிவகார்த்திகேயன் பர்த்டே ஸ்பெஷல்: இன்று வெளியாகிறது ‘மாவீரன்’ படத்தின் முதல் பாடல்.!
சினிமா துறையில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் பல தடைகளை சந்தித்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது என்றே கூறலாம். இவர் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் கண்டிப்பாக 100 கோடி வசூலை கடந்து விடும். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இவர் இருக்கிறார்.
இவர் சினிமாவுக்கு வந்து 17-ஆண்டுகள் நிறைவு பெற்றதை சமீபத்தில் கொண்டாடினார். அதனை தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#Sivakarthikeyan Annan’s 1st Single #SceneAhSceneAh From #Maaveeran Releasing On Feb 17th! ???? pic.twitter.com/DFeiL4SbkS
— Vimal Raj (@vimalraj9524) February 15, 2023
இந்த நிலையில், அவருக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில், அவர் நடித்து வரும் மாவீரன் படத்திற்கான முதல் பாடலை இன்று படக்குழு வெளியிட உள்ளது. மாவீரன் திரைப்படத்தை பிரபல இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் என்பவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.