வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். சிங்கத்தை 6 மாதங்களுக்கு பராமரிக்க, சிவகார்த்திகேயன் சுமார் ரூ.75,000 செலுத்தியுள்ளாராம்.
சிங்கத்தை தத்தெடுப்பதற்கான கால அவகாசம் ஆறு மாதங்கள் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் அனைவரிடமும் இந்த செய்தி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா காலத்தில், வண்டலூர் பூங்காவில், விலங்குகள் பராமரிக்க முடியாமல் உயிரிழந்தன. இதையடுத்து விலங்குகளை தத்தெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பலரும் விலங்குகளை தத்தெடுத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் விலங்குகளை தத்தெடுப்பது இது முதல் முறையல்ல… தற்போது, சிங்கத்தை தத்தெடுத்த அதே இடத்தில் ஏற்கனவே யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.
செப்டம்பர் 2021 இல், நடிகர் விஷ்ணு என்ற சிங்கத்தையும் பிரகிருதி என்ற யானையையும் அதே மிருகக்காட்சிசாலையில் இருந்து தத்தெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, ஆறு மாத காலத்திற்கு அந்த விலங்குகளை தத்தெடுத்துள்ளாராம்.
தற்போது, மடோன் அஷ்வின் இயக்கி வரும் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் வருகிறார். இது ஒரு அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் படமாகும். இவருடன் நடிகை அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…