Puthiya Paravai: சிவாஜி கணேசனின் அந்த நடிப்பு! உருக வைக்கும் ‘புதிய பறவை’ கிளைமாக்ஸ் காட்சி!
இயக்குனரும் நடிகருமான தாதா மிராசி இயக்கத்தில், நடிப்பின் திலகம் சிவாஜி கணேசன் அவரே தயாரித்து, நடித்துள்ள ‘புதிய பறவை’ படத்தில் சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, சௌகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி, ஓ.ஏ.கே.தேவர், எஸ்.வி.ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். அப்பவே, இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது, வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.
1964 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘புதிய பறவை’ திரைப்படம் சிவாஜி கணேசன் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி ஃபிலிம்ஸின் மூலம் தயாரித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். காலப்போக்கில் சிவாஜி ஃபிலிம்ஸ் என்ற பெயரை சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்று மாற்றப்பட்டது. புதிய பறவை திரைப்படம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சேஷ் அங்க’ என்ற பெங்காலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
கதையின்படி, சிவாஜி கணேசன் (கோபால்) ஒரு பணக்கார தொழிலதிபராக, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு ஒரு சொகுசு கப்பலில் வரும்பொழுது, அவரது தந்தை வி.கே.ராமசாமி (ராமதுரை) உடன் வந்த மற்றொரு பயணியான லதாவை சந்திக்கிறார். பின்னர், கோபாலும் லதாவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, கோபால் ஊட்டியில் உள்ள தனது மாளிகையில் தங்கும்படி லதாவை அழைக்கிறார்.
அதை ஏற்றுக்கொண்டு லதாவும் மாளிகைக்கு வருகை தந்தார். ஒரு நாள், லதா, கோபால் ரயிலை வேகமாக செல்லும் பார்க்கும் போதெல்லாம் ஏன் என்று கேட்க, இதற்குக் காரணம் தனது முதல் மனைவிதான் என்று அவர் விளக்குகிறார் கோபால். தாயை இழந்த சோகத்தில், சிங்கப்பூரில் அலைந்து திரிந்ததாக கோபால் பிளாஷ்பேக் கதையை விளக்க.
ஒரு நாள் கிளப் ஒன்றில், பாடகியான சௌகார் ஜானகி (சித்ரா)வை பார்க்கிறார் நாளடைவில் அது காதலாக மலர, அவரது சகோதரர் ராஜு முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சித்ரா எப்பொழுதும் குடிபோதையில் வீட்டிற்கு வருகிறார், கோபால் பலமுறை கேட்டுக்கொண்டாலும், கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கவில்லை.
ஒரு நாள் கோபாலின் பிறந்தநாள் விழாவிற்கு குடிபோதையில் சித்ரா வந்தபோது, கோபால் அவளை எச்சரிக்க…. சித்ரா காதில் சிறுதும் கூட கேட்கவில்லை. பின்னர், சித்ராவின் நடத்தையைப் பார்த்து கோபால் தந்தை மாரடைப்பால் இறக்கிறார். இதனால், எரிச்சல் அடைந்த கோபால், சித்ராவை திட்டியதும், பதிலுக்கு சித்ரா கோபாலை திட்டினாள், இதனால் கோபத்தில் அறை விடுகிறார்.
இதனையடுத்து அன்றிரவு, சித்ரா ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்படுகிறார். இதற்காக தான் ரயில் செல்லும்போதெல்லாம் பார்ப்பதாக விளக்கம் அளிக்கிறார். இதையடுத்து, கோபாலுக்கும் லதாவுக்கும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பின்னர், கோபாலின் மாளிகையில் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது, சித்ரா என்று கூறிக்கொள்ளும் ஒரு பெண் தன் மாமா எம்.ஆர்.ராதா (ரங்கன்) உடன் வருகிறாள்.
அந்த பெண் உண்மையிலேயே சித்ராதான் என்று ரங்கன் அனைவரையும் நம்பவைத்த பிறகு லதாவுடனான கோபால் நிச்சயதார்த்தம் நின்று போகிறது. இப்படி படத்தில் பல காதல் திரில்லர் நிறைந்திருந்தாலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தத்ரூமாக வடிவமைத்திருப்பர். இந்த படத்தில் இந்த காட்சி தான் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும் என்றே சொல்லலாம்.
அதவாது, அந்த க்ளைமாக்ஸில் சிவாஜி கணேசன் லதாவிடம் “சிரிச்சு சிரிச்சு பேசுனது ஆடி பாடுனது அத்தனையும் நடிப்பா சொல்லு லதா நடிப்பா என்று கேட்பார் மேலும் க்ளைமாக்ஸ் முடிந்ததும், “பெண்மையே! நீ வாழ்க, உள்ளமே உனக்கு ஒரு நன்றி” என்று கூறியிருப்பார். இது அனைவரது மனதையும் உருக வைத்திருக்கும். அதுபோல், படத்தில் இடம் பெற்றுள்ள ‘எங்கே நிம்மதி’, ‘பார்த்த ஞானபகம் இல்லையோ’, ‘சிட்டு குருவி’, ‘ஆஹா மெல்ல’, ‘உன்னை ஒன்று கெட்டேன்’ என அனைத்து பாடல்களும் இன்றுவரை ஹிட் தான்.
இப்படி மாபெரும் வரவேற்பு பெற்ற புதிய பறவை திரைப்படம், 2010 ஜூலை 23 அன்று சிவாஜி கணேசனின் குடும்பத்திற்குச் சொந்தமான சாந்தி திரையரங்கில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது, அப்பொழுதும் படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பலரும், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்த படத்தின் திரைக்கதையை நன்னு எழுதியுள்ளார், வசனத்தை ஆரூர் தாஸ் எழுதியுள்ளார். கே.எஸ்.பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை என்.எம்.சங்கர் செய்துள்ளார். ஒலிப்பதிவு ஆல்பம் மற்றும் பின்னணி இசையை விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இருவரும் கையாண்டுள்ளனர், பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார்.