சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினியை பற்றிய உண்மை சீதாவுக்கு தெரிஞ்சு போச்சு..! சீதா எல்லார்கிட்டயும் சொல்லிருவாளா?
சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஆகஸ்ட் 7]எபிசோடை இந்த பதிவில் காணலாம்.
மீனா அழுதுட்டு இருக்காங்க ..ஏய் மீனா என் கொழுந்தியா பாஸாயிட்டா.. நீயே அழுதுட்டு இருக்க அப்படின்னு முத்து கேக்குறாரு. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க அப்படின்னு மீனா சொல்றாங்க. இதை வீட்ல எல்லார்கிட்டயுமே சொல்லணும்னு போறாங்க.. அண்ணாமலை உக்காந்திருக்குறாரு அண்ணாமலை கிட்ட சொல்றாங்க அவர் ரொம்ப சந்தோசப்படுறாரு.. ஆனா விஜயா வராங்க ஆமா பெரிய கலெக்டருக்கு பாஸ் பண்ணிட்டா அப்படின்னு சலிப்பா சொல்றாங்க. இத பாத்தா முத்து கிச்சன்ல இருந்து தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குறாங்க.. இந்தாங்க அணைச்சுக்கோங்க உங்க வயிறு எரியுது அப்படின்னு சொல்லவும் அண்ணாமலை கூட சேர்ந்து கிண்டல் அடிக்கிறார்.
இப்போ மனோஜ் சொல்றாரு நான் நாலு டிகிரி முடிச்சு இருக்கேன் இன்னும் டைம் இருந்தா இன்னும் படிச்சு இருப்பேன்னு சொல்றாரு. இப்போ முத்து சொல்றாரு இதுக்கு மேல நீ வேலைக்கே போகாம படிச்சிட்டு இருக்குறப்ப அப்பாக்காசும் கரைஞ்சுட்டே இருந்திருக்கும் நீ படிச்சு டிகிரி வாங்குனது பெரிய விஷயம் இல்ல உனக்கு எல்லாமே தேவையான டைம்ல கிடைச்சுச்சு. ஆனா சீதாவுக்கு அப்படி இல்ல ஒரு பென்சில் வாங்கணும்னா கூட நாலு நாள் காத்து இருக்கணும் இந்த சூழ்நிலையில் படித்து டிகிரி வாங்குவது பெரிய விஷயம் தான் அப்படின்னு சொல்றாங்க .ரோகிணியும் ஆமா சாதாரண குடும்பத்தில் இருந்து டிகிரி வாங்குவது பெரிய விஷயம் தான் சொல்றாங்க.
டேய் பார்றா பார்லர் அம்மாவுக்கு கூட தெரியுது உனக்கு தெரியல அப்படின்னு சொல்றாங்க. ஸ்ருதி ரவி கிட்ட ரவி நீ இன்னைக்கு பிரியாணி பண்ணிடு சீதாவுக்கு நம்ம வாட்ச் கிப்ட் வாங்கலாம் அப்படின்னு சொல்றாங்க. இப்ப மீனாவோட அம்மா மீனாவுக்கு கால் பண்ணி கோவிலுக்கு வர சொல்றாங்க. கோவிலுல சீதாவை எல்லாருமே பாராட்டிட்டு இருக்காங்க. இப்ப மீனாவும் முத்துவும் வராங்க .. எல்லாருமே சந்தோசமா பேசிட்டு இருக்காங்க பெருமையாவும் பேசிக்கிட்டு இருக்காங்க. இப்ப சீதா சொல்றாங்க எல்லாமே உன்னால் தான் அக்கா அப்படின்னு நீ நல்லா படிப்ப ஆனாலும் எங்களுக்காக உன்னுடைய படிப்பை விட்டுட்டு அப்படின்னு சொல்றாங்க. இதை கேட்ட முத்து மீனா நீ நல்லா படிப்பியா அப்படின்னு கேக்குறாரு .
அதுக்கு மீனாவோட அம்மா அவ தான் மாப்பிள்ளை பஸ்ட் ரேங்க் எடுப்பா அப்படின்னு சொல்றாங்க..மீனா சொல்லுறாங்க அதெல்லாம் இருக்கட்டும் சீதா இந்த காலத்துலையும் போய் ஊர் சுத்தாம குடும்ப கஷ்டம் தெரிஞ்சு நீ நல்லா படிச்சிருக்க .அம்மாவுக்கும் உதவி பண்ணி இருக்க இது ரொம்ப பெரிய விஷயம் அப்படின்னு சொல்லுறாங்க . இப்ப எல்லாருமே சந்தோஷமா போட்டோ எடுத்து இருக்காங்க. இப்ப ஷோரூம்ல மனோஜ் ரோகிணியும் கணக்கு பார்த்துட்டு இருக்காங்க. மனோஜ் பேங்க்ல இருந்து ஆள் வந்துருக்காங்க .சார் உங்க பங்களா இருந்து வரோம் .உங்களுக்கு கிரெடிட் கார்டு வந்துருக்கு .ரோகிணி கேக்குறாங்க மனோஜ் கிரிடிட் கார்டு அப்ளை பண்ணியா அப்படின்னு ..இல்ல ரோகிணி நான் எதுவும் பண்ணல அப்படின்னு சொல்றாங்க .
அதுக்கு பேங்க்ல இருந்து வந்தவர் சொல்றாரு உங்களோட பேங்க் டிரான்சுக்ஷனை பார்த்து நாங்களே பண்ணி இருந்தோம் உங்களுக்கு பிளாட்டினம் கார்டு கிடைச்சிருக்கு. இத வச்சு நீங்க பத்து லட்சம் வரைக்கும் யூஸ் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்றாரு இத கேட்டு மனோஜும் ரோகிணியும் 10 லட்சமா அப்படின்னு ஷாக்கா சந்தோசப்படுறாங்க.. இதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது. நாளைக்கான ப்ரோமோல ரோகிணியும் வித்யாவும் ஹாஸ்பிடல் வந்துருக்காங்க.
இது உனக்கு தேவையா அப்படின்னு ரோகிணியை பார்த்து வித்யா கேக்குறாங்க .இல்லடி நிறைய டைம் நான் கன்சிவ் ஆக ட்ரை பண்ணிட்டேன் என்னன்னு தெரியல ஒரு செக்கப் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு வித்யா சொல்றாங்க அதெல்லாம் ஒன்னும் இருக்காது ஏற்கனவே நீ குழந்தை பெத்தவ தானே அப்படின்னு சொல்றாங்க. இதை சீத்தா கேட்டுட்டு இருக்காங்க.. நாளைக்கு என்ன நடக்க போகுது சீதா எல்லார்கிட்டயும் சொல்லிடுவாங்களா.. வரப்போகிற எபிசோடு பார்க்கலாம்..