நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் !!!
திருமணம் செய்வதாக கூறி இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் பலகோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ருதி சமூக வலைதளம் மூலமாக ஏராளமான இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பாலமுருகனிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணம் வாங்கியுள்ளார். நடிகை ஸ்ருதியின் அழகிலும் அவருடைய ஆசை வார்த்தைகளிலும் மயங்கிய பாலமுருகன் ஸ்ருதி கேட்க்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்துள்ளார்.
இப்படியே கிட்டதட்ட 45 லட்சம் ரூபாய் வரை ஸ்ருதியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளார். மேலும் திருமணத்தைக்குறித்து பேச்சு எடுக்கும்போதெல்லாம் ஸ்ருதி வெவ்வேறு காரணங்களைக் கூறி பாலமுருகனை ஏமாற்றியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன் ஸ்ருதி குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் நடிகை ஸ்ருதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் இதுபோன்று பல பேரிடம் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஸ்ருதி, அவரது தாயார் சித்ரா, தந்தை பிரசன்னா வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஸ்ருதி மீது மேலும் பல மோசடி புகார்கள் வந்ததால், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஸ்ருதி மற்றும் அவரது தாயார் சித்ரா, தந்தை பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் மீது குண்டர்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு