சிறுத்தை சிவா – சூர்யா இணையும் புதிய படத்திற்கு டி.இமான் வேண்டாம் அனிருத் போல இளம் இசையமைப்பாளரை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒரு இயக்குனர் அல்லது நடிகரின் அதிகாரமும் சினிமாவில் இருக்கும் போல. அப்படி தான் நடக்கிறது சிறுத்தை சிவா விஷயத்தில். அண்ணாத்த திரைப்படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா சூர்யாவை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் மெகா ஹிட்டாக மாற்றிவிட வேண்டும் என வேலை செய்து வருகிறார் சிறுத்தை சிவா. சிவாவின் சமீபத்திய படங்களில் டி.இமான் தான் இசையமைப்பாளர்.
அதே போல இந்த படத்திற்கும் அவரையே சிபாரிசு செய்துள்ளார் சிவா. ஆனால், படக்குழு டி.இமான் வேண்டாம். அனிருத் போல இளம் இசையமைப்பாளர்களை களமிறக்குங்கள் அப்போது தான் படத்திற்கு நல்ல கமர்சியல் வியாபாரம் கிடைக்கும் என கூறிவருகின்றனர்.
அனிருத் தான் படக்குழுவின் முதல் சாய்ஸ். ஆனால், அனிருத்தின் கால்ஷீட் தற்போதைக்கு கிடைப்பது கடினம் என்கிறது சினிமா வட்டாரம். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…