சிறகடிக்க ஆசை சீரியல் – மீனாவிடம் உண்மையை உளறும் பார்வதி ..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்..  நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு ஏற்பட்ட சண்டை..

Ravi,shuruthi (1) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்..  நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு ஏற்பட்ட சண்டை..

நீத்துவால் ஏற்பட்ட சண்டை ;

விஜயா மனோஜ பார்த்து சாதாரண முட்டைக்கு என் கையை வேக வச்சுட்டியே அப்படின்னு தள்ளிவிடுறாங்க ..முத்துவும் மனோஜ ரொம்ப கேலி பண்றாரு .. உன் கடையில இருந்த மூணு முட்டையோட  உன்னையும்  சேர்த்து நாலு முட்டை ஆச்சு அப்படின்னு கிண்டல் பண்ணி சிரிக்கிறாரு ..இத பாத்துட்டு ரோகினியும் தள்ளி விடுறாங்க.. இப்போ மீனா பூ கொடுக்க போறாங்க. .அந்த இடத்துல மீனாவ  பாலோ பண்றவரு நிக்கிறாரு. உங்க பேர் என்னன்னு கேக்குறாங்க.. மீனா சொல்லாம நிக்கிறாங்க .. நான் உங்களுக்கு  அன்புன்னு பேர்  வச்சுருக்கேன் . உடனே மீனா முத்துக்கு கால் பண்ணி  என்ன ஒருத்தர்  ஃபாலோ பண்ணிட்டு இருக்காரு .முத்து ஷாக்கா  என்ன மீனா சொல்ற.. நீ கைல பெப்பர் ஸ்பிரே வச்சுக்கோ திரும்பவும் அவன் வந்தா எனக்கு கால் பண்ணு அப்படின்னு சொல்றாரு.

இப்போ ஸ்ருதி ரவி கிட்ட  நீ ஃப்ரீயா இருந்தா சொல்லு நம்ம ஒரு பங்க்ஷன் போகலாம்னு சொல்றாங்க .ரவி ஃபர்ஸ்ட் வரேன்னு சொல்றாரு .அதுக்கு அப்புறம் நீத்து கால் பண்றாங்க ரவி நீங்க உடனே ஆபீசுக்கு வாங்க வேலை இருக்குன்னு சொல்ல உடனே ரவியும் ஓகே மேடம்னு  சொல்றாரு.  இதை கேட்ட சுருதிக்கு கோவம் வருது.. சாரி ஸ்ருதி எனக்கு வேலை இருக்குது. நீ மட்டும் போயிட்டு வா அடுத்த டைம் நான் வரேன் அப்படின்னு சொல்றாரு.. உடனே சுருதி நீ ஒன்னும் வர வேண்டாம் அப்படின்னு பங்க்ஷன் கிளம்பி போயிடறாங்க. இப்போ அதே பங்ஷனுக்கு நீத்து வராங்க.. கூடவே ரவி கேக் கொண்டு வராரு.. இத பாத்த ஸ்ருதிக்கு கோவம் வருது பர்த்டே பார்ட்டி  முடிஞ்சதும் சுருதி கோவமா கிளம்பிடறாங்க. பின்னாடியே ரவியும் போறாரு .. நான் உன்னை இந்த பங்க்ஷன்க்கு  தான் கூப்பிட்டேன். இப்போ நீ அவ கூட வந்திருக்கிற அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு உடனே ரவி இது ஒர்க் விஷயமாதான்  வந்தேன்.

எங்க ரெஸ்டாரண்டுக்கு கேக் ஆர்டர் வந்துருச்சு அதை கொண்டு வந்து கொடுக்க தான் வந்தேன் அப்படின்னு சொல்றாங்க .ஆனாலும் ஸ்ருதி கோவமா  போய் நீ சேவ் பண்ணிட்டு நீயும் நல்லா சாப்பிட்டு கிளம்பு அப்டின்னு சொல்லிட்டு கிளம்பிடறாங்க இதை பார்த்த நீத்து  என்ன ஆச்சு ரவி ஏன் சுருதி கோவமா போறாங்க.. ஒன்னும் இல்ல நீத்து நான் இதோ வரேன் அப்படின்னு  ரவி சொல்றாங்க.. இப்போ மீனா பார்வதி வீட்டுக்கு பூ கொடுக்க வராங்க.. பார்வதியும்  அன்னைக்கி நடந்த பிரச்சனை எல்லாம் பத்தி மீனா கிட்ட சொல்றாங்க.. மீனா வீட்டுல  நடந்த பிரச்சனைக்கு எல்லாம் நான் காரணம் இல்ல என்னை தப்பா நினைச்சுராதமா விஜயானாலதான் அப்படி சொல்ல வேண்டியதா போச்சு. நா முத்து கிட்ட எல்லாமே சொல்லிட்டேன் மனசு கேட்கலாமா.. நீ என்னை எதுவும் தப்பா நினைச்சுக்காதம்மா சொல்றாங்க.

manoj,muthu (2) (1)

பார்வதி மீனாவிடம் உண்மையை கூறிவிட்டார் ;

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி ..  உன்ன மாதிரியே ரோகிணியும் தங்கமான பொண்ணுமா உன் மேல எந்த பழியும் வந்து விடக்கூடாதுன்னு அவளோட தாலி செயினை  வித்துட்டு அதுல வந்த இரண்டு லட்சம் பணத்தை தான் விஜயாவுக்கு கொடுக்க சொன்னா  அதுதான் நான் பண்ணுனேன் அப்படின்னு உளர்றாங்க.. இத கேட்டா மீனாவுக்கு ஷாக் ஆகுது.. உண்மையாவா ஆன்ட்டி சொல்றீங்க .. ஆமாமா நீ இதை யார்கிட்டயும் சொல்லிடாத அப்படின்னு சொல்ல சரி  ஆன்ட்டி நான் சொல்ல மாட்டேன்னு சொல்றாங்க மீனா. ஆனா ரோகிணி எனக்காக ஏன் இப்படி செஞ்சாங்க  அதுதான் எனக்கு புரியல ..இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க.

நாளைக்கு ப்ரோமோல மனோஜோட ஷோரூமுக்கு திருஷ்டி பொம்மை கொண்டு  வந்துருக்காங்க ..அந்த போட்டோவை பார்த்தா  ஒரு டைம் விஜயா மேல மாவு கொட்டி விழுந்தத சுருதி போட்டோ எடுத்திருப்பாங்க அந்த போட்டோ மாதிரியே இருக்கு.. அந்த திருஷ்டி பொம்மை வைக்கிறவர் சொல்றாரு இந்த போட்டோ வடநாட்ல ரொம்ப பேமஸ் தமிழ்நாட்டுக்கு இப்பதான் வந்திருக்குது அப்படின்னு சொல்றாரு .உடனே ரோகிணி கிட்ட போய் அந்த போட்டோ எடுத்து பாக்குறாங்க இந்த முகத்தை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கு அப்படின்னு கொஞ்ச நேரம் பாத்துட்டு  மனோஜ் இது உங்க அம்மாவோட போட்டோ அப்படின்னு சொல்லுறாங்க .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்