சிறகடிக்க ஆசை சீரியல் ..மீனாவை பெண் கேட்டு வரும் முருகன்.!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 7] எபிசோடில் மீனாவை வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறார் முருகன் ..மீனாவிடம் மாட்டிக்கொண்டார் முத்து..

muthu,meena (31) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 7] எபிசோடில் மீனாவை வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறார் முருகன் ..மீனாவிடம் மாட்டிக்கொண்டார் முத்து..

முருகனுக்கு முத்து கொடுக்கும் ஷாக் ;

ரொம்ப நாளா மீனாவ ஃபாலோ பண்ணிட்டு இருக்குற முருகன் முத்து கொடுத்த ஐடியாவால வீட்டுக்கு பொண்ணு கேட்டு வராரு ..அங்க அண்ணாமலை ,ரவி ,சுருதி மட்டும் இருக்கிறாங்க.. இப்ப முருகன் வந்து அங்கிள் அப்படின்னு அவர பத்தி சொல்லுறாரு நான் ஒரு ஐடி கம்பெனியில் மாசம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குறேன். உங்க பொண்ணு நான் லவ் பண்றேன் பொண்ணு கேட்டு வந்திருக்கிறேன் ..இப்போ  அங்கே இருக்கிற ரவி சுருதி அண்ணாமலை முழிக்கிறாங்க. ரவி சொல்றாரு நீங்க அட்ரஸ் மாதிரி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் அப்படின்னு.. அதுக்கு முருகன் சொல்றாரு இல்ல நான் கரெக்டான அட்ரஸ் தான் வந்து இருக்கிறேன். இவரு தானே பொண்ணோட அப்பா அப்படின்னு சொல்ல சுருதி சிரிக்கிறாங்க.. இப்போ முத்து போன் பேசிக்கிட்டே மேலே வர்ராரு  .

முத்துவை  பாத்த முருகன் அண்ணே நீங்க எங்க இங்க  அப்படின்னு கேட்க  இதாண்டா என்னோட வீடு அப்படின்னு சிரிக்கிறாங்க ரெண்டு பேருமே நீங்க சொன்ன ஐடியாவால  நான் வீட்டுக்கே பொண்ணு கேட்டு வந்துட்டேனே.. முத்து ஷாக்கா   முழிக்கிறாரு.. இப்போ மீனாவும் வந்துறாங்க ஏய் நீ இங்க என்ன பண்ற அப்படின்னு கேக்குறாங்க.. ஏங்க.. இவன் தான் என்னைய ஃபாலோ பண்ணிட்டு இருக்கிறான் அப்படின்னு சொல்றாங்க.. இந்த ஐடியா கொடுத்ததே அண்ணன் தானே அப்படின்னு முருகன்  சொல்லிட்டு சிரிக்கிறார்.. மீனா முத்துவை பார்த்து முறைக்கிறாங்க .. அப்போ இத்தனை நாள் இவளை  தான் நீ சொன்னியா அப்படின்னு முத்து கேட்கிறாரு.. இப்ப முருகன் அண்ணாமலை கிட்ட அங்கிள் உங்களோட சம்மதம்  சொல்லுங்க அப்படின்னு கேட்க ,,என்ன விட இந்த விஷயத்துல முடிவெடுக்க வேண்டியது முத்து தான்ப்பா அப்படின்னு சொல்லி முத்து கிட்ட திருப்பி விடுறாரு.

meena,muthu (1) (1)

முத்துவை பார்த்து பயந்து ஓடும் முருகன் ;

இப்ப முத்து பக்கத்துல போயிட்டு முருகன் முத்துவை கட்டி புடிச்சிட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது மச்சான் அப்படின்னு சொல்ல.. ரவி ஸ்ருதி எல்லாருமே சிரிக்கிறாங்க .. இப்போ முத்து பேச ஆரம்பிக்கிறாரு ..அவ கழுத்தை பாத்தியா அவன் நெத்திய  பாத்தியா அப்படின்னு கேட்க இப்பதான் முருகன் கழுத்தை பார்க்கிறார் கல்யாணம் ஆயிருக்கு.. அவ எனக்கு யாருன்னு தெரியுமா  என்னோட பொண்டாட்டி டா அப்படின்னு சொல்ல. அண்ணே என்னை மன்னுச்சுருங்க  அப்படின்னு காலை பிடித்து கெஞ்சுறாரு ..இத்தனை நாளு அவங்க கண்ணு மட்டும் தான் நான் பார்த்தேன் செல்லுல போட்டோவையும் பார்த்திருக்கிறேன் அப்படின்னு சொல்றாரு.  இப்போ முத்து அண்ணாமலையும் சரி விடு  இதுக்கு அப்புறமாச்சும்  பெண்களை பார்க்கிறதுக்கு முன்னாடி அவங்க கழுத்தையும் நெத்தியையும் பாருங்க அப்படின்னு சொல்லிட்டு அண்ணாமலை கிளம்புறாரு ..

முருகனும்  பயந்துட்டே கிளம்பறாரு.. ரவி கூப்பிட்டு ரோமியோ நீங்க வாங்கிட்டு வந்த திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு போங்க அப்படின்னு பழம் பூ எல்லாத்தையுமே திருப்பி கொடுக்குறாரு .இப்ப முத்து மாடிக்கு போயிடுறாரு.  மீனா மாடிக்கு வந்து முத்துவை முறைக்கிறாங்க.. நீங்க பண்னுன  வேலை நல்லா இருக்குது உங்க பொண்டாட்டிய கரெக்ட் பண்ண நீங்களே ஐடியா குடுப்பீங்களா .. நான் கூட ஏதோ காலேஜ் பொண்ணுன்னு  நினச்சேன்  அப்படின்னு சொல்ல அப்போ நான் காலேஜ் பொண்ணு மாதிரியே இருக்கிறேனா  அப்படின்னு மீனாவும் கேட்க அந்த போட்டோல அப்படி தெரிஞ்சி இருப்ப போல. நானும் இந்த மாதிரி போட்டோ எல்லாம் எடுத்து போட்டா அப்படித்தான் இருப்பேன்   என் பின்னாடியும் வருவாங்க இல்ல அப்படின்னு சொல்ல .அதுக்கு மீனா அடிக்கிறதுக்கு துரத்துறாங்க வீட்டுக்குள்ள ஓடி வர அந்த டைம்ல மனோஜ் ரோகினி ஸ்வீட் பாக்ஸோட சந்தோசமா வராங்க.. இதோட இன்னைக்கு எபிசோட முடுச்சுருக்காங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்