சிறகடிக்க ஆசை சீரியல்-ரோகினியை வீட்டை விட்டு துரத்தும் மனோஜ், விஜயா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 27] எபிசோடில் மீனாவை துரத்தும் நபர் ,பதட்டத்தில் வித்யா வீட்டுக்குள் செல்லும் மீனா..

vijaya (20) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 27] எபிசோடில் மீனாவை துரத்தும் நபர் ,பதட்டத்தில் வித்யா வீட்டுக்குள் செல்லும் மீனா..

மாட்டிக்கொள்ளும் ரோகிணி ;

முத்து மீனா கிட்ட கிரிஷ் விஷயத்துல ஏதோ ஒரு ரகசியம் இருக்கு..  மறைக்கிறாங்க.. இதைக் கேட்ட மீனா இது எதுக்குங்க நமக்கு.. இல்ல மீனா கிரிஷ்  பாட்டி தங்கச்சி ஊரு பக்கத்துல தான் இருக்கு அவங்க கிட்ட விசாரிக்கலாம்னு சொல்றாரு.. இதெல்லாம் ரோகினி கேட்டு பயந்து போய் தூங்க போறாங்க அப்போ விஜயா ரோகிணியை பாத்து  நீ எல்லாம் ஒரு பொண்ணாடி..  என் புள்ளையை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்ட  அப்படின்னு சொல்றாங்க. மனோஜும் நம்ப வச்சு என்ன கழுத்தை அறுத்திட்ட இல்ல வெளியே போ அப்படின்னு புடிச்சி தள்றாங்க.. அதோட ரோகினி முழிச்சிடறாங்க.. மனோஜ் எந்திரிச்சு என்ன ஆச்சுன்னு கேக்குறாரு.. நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன் மனோஜ் என்னை விட்டு போயிட மாட்ட இல்ல அப்படின்னு கேக்குறாங்க.. கனவு எதாவது கண்டியா அப்படியெல்லாம்  ஒன்னும் நடக்காது நீ தூங்கு அப்படின்னு சொல்றாரு..

காலைல ஆனதும் மீனா பூ கொடுக்க போறாங்க. அங்க மீனாவ ஒருத்தர் பாலோ பண்ணிட்டு வராரு ..பதட்டத்தில் மீனா என்ன செய்றதுன்னு தெரியாம வித்யா வீட்டுக்கு போறாங்க.. அங்க வித்யா  முத்து போன்ல இருக்க  ஃபோட்டோவை பார்த்து ரசிச்சிட்டு இருக்காங்க.. ரோகினி கிட்டையும் ரெண்டு பேரும் ரொம்ப ரொமான்டிக்கான கப்புள்ஸ் டி  அப்படின்னு சொல்றாங்க.. முதல்ல இந்த செல்ல தூக்கி கடல்ல போடு மீனா வந்தாங்கன்னா என்ன நடக்கும்னு தெரியும்ல..  அவங்க எதுக்கு இங்க வர போறாங்க நீ ரொம்ப யோசிக்கிற  ரோகிணி அப்படின்னு சொல்றாங்க, இந்த டைம்ல மீனா  கதவை தட்டுறாங்க திறந்து பார்த்தா மீனாவா இருக்கிறாங்க அதை பார்த்து ரோகினிக்கு ஷாக் ஆயிருது.. ஆனா மீனா பதட்டத்தில் இருந்ததுனால செல்ல கவனிக்காம இருக்காங்க.

meena (11) (1)

மீனாவை துரத்தும் நபர் இவரா ?

இப்போ என்ன ஒருத்தரை ஃபாலோ பண்ணிட்டு இருக்காரு .இவரை நான் ஏற்கனவே ரெண்டு டைம் பார்த்து இருக்கிறேன். இன்னைக்கு பின்னாடியே வராரு அதான் பதட்டத்துல உங்க வீட்டுக்கு வந்துட்டேன் அப்படின்னு சொல்றாங்க .அது யாருன்னு பாக்க போறாங்க ..அங்க யாருமே இல்லனு சொல்றாங்க .அவங்க   கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன் அதுக்குள்ள நீங்களும் கிளம்பிருங்க மீனா அப்படின்னு சொல்றாங்க.. மற்றொரு பக்கம் முத்துவோட கார் செட்டில் முத்து பிரண்டுக்கு பர்த்டேக்கு   கேக் வெட்டி கொண்டாடிட்டு இருக்காங்க. அப்ப முத்துவோட பிரண்டோட தம்பி தான் மீனாவ ஃபாலோ பண்ணது ..அவங்களும் அங்கே வராங்க.. முத்து அவரை  பத்தி விசாரிக்கிறார், எப்போ கல்யாணம் கேட்கிறார் பொண்ணு பாத்துட்டு இருக்காங்க.. நானும்  பொண்ணு பார்த்திருக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க.

அவங்க கிட்ட எப்படி போய் பேசுறதுன்னு தெரியல அண்ணே அப்படின்னு சொல்ல அது மீனான்னு  தெரியாமலே டிப்ஸ் எல்லாம் குடுத்துட்டு இருக்காரு.. இதெல்லாம் கேட்டுட்டே இருக்க செல்வம் எப்படிடா இவ்வளவு விஷயம் தெரிஞ்சு சொல்ற.. அப்படின்னு கேக்குறாரு .இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க.. நாளைக்கு  ப்ரோமோல  மனோஜோட கடையில மூணு முட்டை இருக்கு அத மனோஜ் வேலை செய்றவங்க எல்லாரும் இது செய்வினை  முட்டை மாதிரி இருக்கு சார் அப்படின்னு  சொல்றாங்க.. மனோஜ் ஷாக்கா பாத்துட்டு நிக்கிறாரு..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்