சிறகடிக்க ஆசை சீரியல்- அண்ணாமலையும் க்ரிஷும் .. ஒரே ஸ்கூலில்.. ரோகிணி மாட்டிக் கொள்வாரா?

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட கண்டிஷன்ஸ் ..

Rohini (13) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட கண்டிஷன்ஸ் ..

ரோகிணி போடும் புது ரூல்ஸ் ;

ரோகிணி அவங்க அம்மாவையும் கிரிஷையும்  புது வீட்டிற்கு கூப்ட்டு  வந்திருக்காங்க ..வித்யா அவங்க  அம்மா கிட்ட இந்த வீடு புடிச்சிருக்கான்னு  கேக்குறாங்க ..அதுக்கு அவங்களும் ரொம்ப அமைதியா இருக்குது.. கிரிஷும்  சூப்பரா இருக்குது ஆன்ட்டி அப்படின்னு சொல்றாங்க. ரோகிணி புது புது ரூல்ஸ்  போடுறாங்க .வீட்டை விட்டு வெளியே போகாதமா.. க்ரிஷயும்  போக விடாத.. பால் எல்லாம் உனக்கு இங்கே கொண்டு வந்துருவாங்க.. ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி நான் வாங்கி கொடுத்துடுவேன். அக்கம் பக்கத்துல யாரு கூடயும் அதிகமா பேசாத ..டிவி சத்தமா வால்யூம் வைக்காத.. அப்பிடுன்னு  பல கண்டிஷனை போடுறாங்க.. இதைக் கேட்ட அவங்க அம்மா பேசாம ஒரு போடுல  எழுதி வச்சிட்டு போ. வேற எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு தான் சொல்றேன்.. இப்போ முத்து கிரிஷ பாக்க  அவங்க ஊருக்கு போயிருக்காங்க..

அங்கே வீடு சாத்தி இருக்கவும்  கால் பண்றாங்க .இத பாத்த ரோகினி ஸ்பீக்கரில் போட சொல்றாங்க.. அவங்களும் ஸ்பீக்கரில் போட்டு பேசுறாங்க ..முத்து கேட்கிறார் அம்மா எங்கே இருக்கீங்க ..உங்கள பாக்கலாம்னு வெளியில் தான் இருக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க .. என்னப்பா சொல்ற அப்படின்னு கேக்குற என்னப்பா சொல்ற அப்படின்னு சாகா கேட்கிறாங்க இல்ல உங்க ஊருக்கு ஒரு சவாரிக்கு வந்தேன் கிரிஷ  பார்த்துட்டு போலாம்னு வந்தேன் அப்படின்னு சொல்றாங்க .இங்க பாருப்பா இனிமேல் எங்களையெல்லாம் பார்க்க வர வேண்டாம் என் பொண்ணு வேற வீடு பார்த்து வச்சுட்டா..  இனிமேல் நீ எங்கள பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் .எங்களுக்கு போனும் பண்ணாத அப்படின்னு சொல்லிடறாங்க. இதைக் கேட்ட முத்துக்கு ரொம்ப கவலையா இருந்து.. இப்போ போன வச்சதும்  பாவண்டி அந்த புள்ள எவ்வளவு பாசமா விசாரிக்கிறான் என்ன போய் இப்படி பேச வச்சுட்டியே அப்படின்னு சொல்றாங்க.

Rohini,vithya (1) (1) (1)

அண்ணாமலையும் கிரிஷும் ஒரே ஸ்கூலில் ..

எல்லாம் நல்லதுக்கு தான் அப்படின்னு ரோகினி சொல்றாங்க. இப்போ அண்ணாமலை ஒரு ஸ்கூல்ல வேலை தேடி போயிருக்கிறார்.. அதே ஸ்கூலுக்கு கிரிஷ சேர்க்க  ரோகிணி கூப்டுவாரங்க .. அண்ணாமலை கண்ணுல ரோகினி படாம எப்படியோ தப்பிச்சிடறாங்க .இப்போ முத்து வீட்டுக்கு வர்றாரு மீனா கிட்ட கிரிஷ  பாக்க போன விஷயத்தை சொல்றாரு.. அந்த அம்மா பேசுறதே சரி இல்ல அவங்களுக்கு யாரோ சொல்லிக் கொடுத்து பேசுற மாதிரி இருக்கு மீனா.. இதுல ஏதோ இருக்கு அப்படின்னு சொல்றாங்க .இது எல்லாமே ரோகினி கேட்டுட்டே இருக்காங்க.. இதோட இன்னைக்கு எபிசோட முடுச்சுருக்காங்க ..

நாளைக்கு  ப்ரோமோல மீனா பூ கொடுப்பதற்காக போய் இருக்காங்க ..அப்போ  மீனாவ  ஒருத்தர் பாலோ பண்றாரு.. பயந்து போய் வித்யா வீட்டுக்கு வர்றாங்க.. வித்யாவும் ரோகிணியும் முத்துவோட செல்ல எடுத்து பார்த்துட்டு இருக்காங்க.. மீனா பதட்டத்துல இருந்ததினால் செல்ல கவனிக்கல .இப்போ மீனா போனதும் ரோகிணி இந்த செல்ல எடுத்துக்கொண்டு போய் கடல்ல வீசிட்டு வா.. வித்யாவும் கடலில் வீசுறதுக்காக நடந்து போயிட்டு இருக்காங்க.. செருப்பு அந்து  போயிருது..அத முத்துகு தெரிஞ்ச தாத்தா பாட்டிகிட்ட குடுத்து தக்கிறாங்க ..  அப்புறம் ஆட்டோவில் ஏறும் போது முத்து  செல்  கீழே விழுந்துருது ..அத வித்யா கவனிக்காம போயிடறாங்க. இப்போ அந்த பாட்டி அந்த செல்லை எடுத்து பார்த்துட்டு இருக்காங்க.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்