சிறகடிக்க ஆசை சீரியல் -அண்ணாமலை எடுத்த திடீர் முடிவால் பதறிப்போன குடும்பம்..

சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில்  ரோகினி..

Annamalai (14) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில்  ரோகினி..

அண்ணாமலையின் திடீர் முடிவு ;

அண்ணாமலை விஜயா கிட்ட நம்ம குடும்பத்திலேயே நீ லஞ்சம் வாங்கி இருக்க அதனால அந்த அஞ்சு லட்சம் பணம் நீ தான் கொடுக்கணும் அப்படின்னு சொல்றாரு ..இதை கேட்ட விஜயா முடியாதுன்னு சொல்றாங்க.. சரி அப்ப நான் கொடுத்துக்குறேன் ஏன்னா நீ என்னோட பொண்டாட்டி நீ என்ன பண்ணாலும் அதுல பாதி என்னையும் சேரும் நான் வேலைக்கு போறேன் அப்படின்னு சொல்றாரு. அத கேட்டா வீட்ல இருக்க எல்லாருமே ஷாக் ஆகுறாங்க.. முத்து சொல்றாரு நீ ஏன் பா  கஷ்டப்படுற நான் பாத்துக்குறேன் பா நீ வேலைக்கு எல்லாம் போக  வேண்டாம் அப்படின்னு சொல்றாரு .ஆனாலும் அண்ணாமலை கேட்காம இல்ல நான் பாத்துக்குறேன் நான் வேலைக்கு போறேன் அப்படின்னு சொல்றாரு.

இப்போ விஜயா மனோஜ் கிட்ட நீ கொஞ்சம் பணம் இருந்தா குடுடா அப்படின்னு கேக்குறாங்க. அதுக்கு மனோஜ் அவ்வளவு பெரிய அமௌன்ட் நான் எங்க அம்மா போவேன் .. என்கிட்ட இல்ல அப்படின்னு சொல்றாரு .ரோகிணி கிட்ட கேக்குறாங்க ரோகினியும் பர்ஸ்ட் இல்லைன்னு சொல்றாங்க.. நீ பேசாம மலேசியாவுக்கு டிக்கெட் போடு நாம உங்க அப்பாகிட்ட கேப்போம் சொல்றாங்க அது அவ்வளவு ஈஸி இல்ல ஆன்ட்டி ..நானே உங்களுக்கு மூணு லட்சம் அமௌன்ட் ரெடி பண்ணி தரேன் அப்படின்னு சொல்லி சமாளிச்சு விடுறாங்க.. இப்போ வித்யா கிட்ட நடந்ததை சொல்றாங்க நீ முத்து மீனாவுக்கு பண்ணதுக்கு இப்ப அனுபவிக்கிற  இப்ப என்ன செய்யப் போறேன்னு கேட்க என்னடி நீ ஓவரா அவங்களுக்கு  சப்போர்ட் பண்ணிட்டு இருக்க அப்படின்னு கோவப்படுறாங்க ரோகினி.

Rohini (12) (1)

ரோகிணியின் திட்டத்திற்கு துணை நிற்கும் பார்வதி ;

முத்து மீனா  செருப்பு தைக்கிற தாத்தா பாட்டியை பார்க்க போறாங்க அவங்களுக்கு இன்னைக்கு கல்யாண நாள்னு  தெரிந்து முத்து சத்யா கிட்ட சொல்லி மாலையும் ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாரு. அவரும் வாங்கிட்டு வந்து கொடுக்க இப்ப எல்லாருமே சந்தோசமா கொண்டாடிட்டு இருக்காங்க. இதை பார்த்த அவங்க கண் கலங்குறாங்க இந்த மாதிரி நாங்க சந்தோஷமா கொண்டாடினதே இல்ல ரொம்ப சந்தோசம்ப்பா அப்படின்னு முத்துவையும் மீனாவையும்  வாழ்த்துறாங்க..

இப்போ ரோகிணி பார்வதி வீட்ல இருக்காங்க பார்வதியும்  ரோகினி  அன்னைக்கு மசாஜ் செஞ்சு  விட்டதுனால நைட் நல்லா தூங்குனேன்.இன்னைக்கும் அதுக்கு தான் வந்தியா  அப்படின்னு கேக்குறாங்க.. இல்ல ஆண்டி  வீட்ல கொஞ்சம் பிரச்சனை.. இருக்கிற பிரச்சினைலை எனக்கே கொஞ்சம் யாராவது மசாஜ் செஞ்சு விடமாட்டாங்களான்னு  தோணுது.. அப்படின்னு சொல்றாங்க.. ஏன் என்னம்மா ஆச்சுன்னு பார்வதி கேட்க பணப்பிரச்சனையே சொல்றாங்க இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க. நாளைக்கு ப்ரோமோலா முத்து கிட்ட மனோஜ் பண கட்ட குடுக்குறாரு.. இப்போ பார்வதியும் விஜயாக்கு போன் பண்ணி பணம் வீட்டில் தான் இருந்துச்சு அப்படின்னு சொல்றாங்க .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்