சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகிணியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரோகிணியின் அம்மா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 6] எபிசோடில் முத்துவும் மீனாவும் கிரிஷை  தத்து  கொடுக்குமாறு ரோகிணியின் அம்மாவிடம்  கேட்கிறார்கள்.

muthu,meena (9) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 6] எபிசோடில் முத்துவும் மீனாவும் கிரிஷை  தத்து  கொடுக்குமாறு ரோகிணியின் அம்மாவிடம்  கேட்கிறார்கள்.

ரோகினி க்ரிஷுக்கு  கால் பண்றாங்க ..க்ரிஷ்  போனை எடுத்து அம்மா எப்ப வருவன்னு கேக்குறான் அதுக்கு ரோகிணி வேலையெல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் வந்துருவேன் இப்ப நீ போன பாட்டு கிட்ட குடுன்னு சொல்றாங்க.. சொல்லு கல்யாணின்னு  ரோகினி அம்மா கேட்க.. அம்மா முத்துவும் மீனாவும் அங்க வராங்க க்ரிஷ  அவங்க கண்ணுள  காட்டாதே கொண்டு போயி சரிதா அக்கா வீட்ல விட்டுருன்னு  சொல்றாங்க.. அவங்களும் சரின்னு சொல்லிடுறாங்க .இப்போ  ரவி கிச்சன்ல கடலை பருப்பு வச்சு பர்பி செஞ்சுருக்காரு ..  நல்லா இருக்குன்னு பாராட்டிட்டு இருக்காங்க மீனாவும் ,ஸ்ருதியும் .இப்போ ஸ்ருதி  சொல்றாங்க அந்த பையனுக்கு நீங்க கொண்டு போய் கொடுத்துடுங்க .

மீனாவும் சரின்னு  சொல்றாங்க.. இப்போ விஜயா வருவதை கவனிச்ச  சுருதி ..மீனா கிட்ட சண்டை போடுற மாதிரி பேசுறாங்க.. இதைப் பார்த்த விஜயா சந்தோஷப்படுறாங்க .விஜயா போனதும் சுருதியும் மீனாவும்  சாரி சொல்றாங்க. இதை பார்த்த ரவி இரண்டு பேரும் நல்லா  பெர்ஃபாமென்ஸ் பண்றீங்கன்னு சொல்றாரு. இப்போ முத்து மீனாவும் க்ரிஷ்  வீட்டுக்கு போறாங்க. அங்க க்ரிஷ்  இருக்க மாட்டான். பாட்டிகிட்ட விசாரிக்கிறாங்க எனக்கு உடம்பு சரியில்லை தம்பி அதனால தெரிஞ்சவங்க வீட்ல விட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். இப்ப கூட உங்க பொண்ணு வரலையா உங்க பொண்ணு நம்பர் குடுங்க அப்படின்னு கேட்க உடனே அவங்களுக்கு  பொறையேறுது..

vijaya,Ravi (1)

இப்ப தண்ணிய குடுத்துட்டு  மீனா அவங்க பக்கத்துல  உக்காந்து அம்மா நாங்க க்ரிஷ  தத்து எடுத்துக்குறோம். இது பரிதாபத்தினால கேட்கல என் உயிரையே காப்பாற்றி இருக்கிறான் அவனோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் க்ரிஷுக்கு  நாங்க நல்ல  அப்பா அம்மாவா இருப்போம். நீங்களும் பாட்டி வீட்ல போய் இருங்க பாட்டி உங்களை நல்லா பாத்துக்குவாங்கன்னு  சொல்றாங்க. இதை கேட்ட அவங்க கண் கலங்குறாங்க ..எதுவுமே பேச முடியாம திணறுறாங்க.. மீனாவும் நீங்க நல்லா யோசிச்சு சொல்லுங்க ஒன்னும் அவசரம் இல்லை . இப்ப அவங்க போனதும் ரோகிணிக்கு கால் பண்ணி முத்து மீனா க்ரிஷ  தத்து கேக்குறாங்க.. நான் எதுவுமே சொல்லல சமாளிச்சு அனுப்பி விட்டேன்னு சொல்றாங்க..

ஆனா க்ரிஷோட  எதிர்காலம் நல்லா இருக்கணும்னா அவங்க கூட இருக்கிறது அவனுக்கு நல்லது .அவன்  மேல அவங்க  ரெண்டு பேருமே ரொம்ப அக்கறையா அன்பா இருக்கிறாங்க.. இதைக் கேட்டதும் ரோகிணிக்கு கோவம் வந்துரும். அப்ப எனக்கு அவன்  மேல் அக்கறை இல்லையா அப்படின்னு கேட்க.. இப்பதானே நீ அவன்  மேல அக்கறையா இருக்க.. எனக்கு என்னமோ அவங்க கிட்ட க்ரிஷ  கொடுக்கிறது நல்லதுன்னு படுதுன்னு  சொல்லவும் ரோகிணி ரொம்ப கோவப்பட்டு அவன் என் பையன் எந்த உரிமையும்  உனக்கு இல்ல.

உடனே ரோகினி ஓட அம்மா சின்ன வயசுல இருந்து என் பேரன  வளர்த்தது நான் எனக்கு இல்லாத உரிமை உனக்கு என்னடி.. க்ரிஷ்  உன்னோட பையன்னு  இந்த ஊருக்கு நான் சொன்னா தான் தெரியும் அதெல்லாம் மனசுல வச்சுக்கோ .ரோகினியோ அதெல்லாம் முடியாது நீ என் பையன கொடுக்கக் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன் இதுக்கு மேல ஏதாவது பண்ணுன நான் மனுஷியா இருக்க மாட்டேன் அப்படின்னு சொல்லி போன வச்சிடறாங்க.. க்ரிஷ் மீனா முத்துக்கு கூட போயிட்டா கதை இன்னும் சுவாரசியமா இருக்கும் . க்ரிஷோட பாட்டி என்ன முடிவு எடுக்க போறாங்கன்னு வரப்போற எபிசோடில் பார்க்கலாம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai
annamalai ptr
gold price