சிறகடிக்க ஆசை சீரியல்- நவராத்திரிக்கு கிருஷ்ணர் வேடத்தில் வந்த க்ரிஷ் தாய் பாசத்தில் கட்டி அணைத்த ரோகினி..!
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 4]எபிசோடில் ரோகிணி கைக்கு சென்ற முத்துவின் செல் போன் ..வீடியோவை வெளியிட தடுத்த வித்யா..
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 4]எபிசோடில் ரோகிணி கைக்கு சென்ற முத்துவின் செல் போன் ..வீடியோவை வெளியிட தடுத்த வித்யா..
ரோகினி கைக்கு சென்ற முத்துவின் போன் ;
பார்வதி வீட்டுக்கு வராங்க ..மீனா நான் ரெண்டு வீட்டுக்கு கொலு பூஜைக்கு போயிருந்தேன் ஆனா நீ பண்ணுன கொழுக்கட்டை ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு பாராட்டுறாங்க.. இப்ப ஸ்ருதியோட அம்மா வராங்க விஜயா வாங்க சம்மந்தி வாங்க.. ஸ்ருதியோட அப்பா வரலையா அப்படின்னு கேக்க அதுக்கு முத்து சொல்றாரு அவர் நம்ம வீட்டுக்கு வந்தா அவர் கௌரவ கொறச்சலா இருக்கும் அப்படின்னு சொல்றாரு.. நீ வாய வெச்சுட்டு சும்மா இருடா அப்படின்னு விஜயா சொல்லிட்டு நீங்க வாங்க சம்மந்தினு உள்ள கூப்பிட்டு போறாங்க . இப்ப வித்யா கோலாட்ட குச்சியோட வர்றாங்க ..ரோகிணி எல்லாருக்குமே கொடுத்து டான்ஸ் ஆட கூப்பிடுறாங்க.. தீபன் , ரதி, சீதா எல்லாருமே வீட்ல இருக்காங்க.. இப்ப அந்த குச்சியை வாங்கி எல்லாரும் டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறாங்க.. முத்து வீடியோ எடுக்குறாரு. இப்போ முத்து டான்ஸ் ஆட போறாரு சீதா வீடியோ எடுக்குறாங்க..
மாத்தி மாத்தி வீடியோ எடுக்குறாங்க.. மீனா கைக்கு செல் போன் வருது இதை பார்த்த ரோகிணி கண் ஜாடையிலே வித்யா கிட்ட சொல்றாங்க செல்லு மீனா கையில தான் இருக்கு நீ வாங்கி வீடியோ எடுக்குற மாதிரி எடு அப்படின்னு சொல்றாங்க.. வித்யாவும் சரின்னு மீனா கிட்ட செல்ல வாங்கி நீங்க போய் டான்ஸ் ஆடுங்க மீனா நான் வீடியோ எடுக்குறேன்னு எடுத்துக்கிட்டே கிச்சனுக்குள்ள போறாங்க.. ரோகிணியும் பின்னாடியே போய் செல்ல வாங்கி சத்யா வீடியோவ பாக்குறாங்க.. ஆனா வித்யா வேணாம் டி முத்து மீனா இப்பதான் சந்தோஷமா இருக்காங்க அப்புறம் பாத்துக்கலாம் ரோகிணி.. அப்படின்னு சொல்ல அதுக்கு ரோகிணி என் லைஃப் என்னடி ஆகிறது இந்த வீடியோவ ரிலீஸ் பண்னுன தான் சிட்டி நான் சொல்றத செய்வான் அப்படின்னு சொல்றாங்க. இந்த டைம்ல மீனா டான்ஸ் ஆடுவதை விட்டுட்டு எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு நான் கிளம்புறேன் முத்து கிட்ட சொல்ல ..
தாய்ப்பாசத்தில் தன்னை மறந்த ரோகினி ;
முத்து இரு கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடலாம் அப்புறம் போய் பாக்கலாம்னு சொல்லி கூப்பிடுறாரு .. என்னை விடுங்க அப்படின்னு சொல்லிட்டு கிச்சனுக்குள்ள வராங்க மீனா வரும்போது தெரியாம ரோகினிய இடிச்சிடுறாங்க செல்லும் கீழே விழுந்துருது ..செல்போனை பார்த்த முத்து இந்த செல் எப்படி உங்க கைக்கு வந்துச்சு அப்படின்னு கேட்க.. மீனா சொல்றாங்க நான் தான் வீடியோ எடுக்க வித்யா கிட்ட கொடுத்தேன்.. ரோகினி சொல்றாங்க டான்ஸ் ஆடின வீடியோவை சும்மா பார்த்துட்டு இருந்தோம் சாரி முத்து .. எனக்கு தெரிஞ்ச கடையில கொடுத்து நானே இதை சரி பண்ணி கொடுத்துடறேன் அப்படின்னு சொல்ல.. முத்து இல்ல அதெல்லாம் வேணாம் நானே பார்த்துக்கொள்கிறேன். வித்யாவும் ரோகிணியும் மிஸ் ஆயிடுச்சேனு ஃபீல் பண்றாங்க.. இப்ப முத்து மீனா கிட்ட நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வரப்போறாரு அப்படின்னு சொல்ல யாருங்க அப்படின்னு மீனா கேட்க நாளைக்கு நான் உன்னை கூப்பிட்டு போறேன்.
இப்ப காலையில எந்திரிச்சு க்ரிஷ் வீட்டுக்கு போறாங்க ..முத்து க்ரிஷ பார்த்ததும் சந்தோஷமா தூக்குறாரு .. என்னடா தனியா இருக்க பாட்டி எங்கன்னு கேக்க பாட்டி கடைக்கு போய் இருக்காங்க அங்கிள் ..இப்போ க்ரிஷோட பாட்டியும் வந்துடறாங்க.. மீனா சொல்றாங்க எங்க வீட்டுல கொலு வச்சிருக்கோம் நீங்களும் க்ரிஷும் கிளம்புங்க அப்படின்னு சொல்றாங்க ..இல்லப்பா நான் வரல அப்படின்னு தயங்குறாங்க .எங்க அம்மாவ பத்தி நீங்க கவலைப்படாதீங்க நான் சமாளிச்சுக்கிறேன்னு சொல்றாரு. க்ரிஷும் பாட்டி போலாம் பாட்டி அப்படின்னு சொல்றான்.. இதோட இன்னைக்கு எபிசோடை முடிச்சு இருக்காங்க. நாளைக்கு ப்ரோமோல க்ரிஷ் கிருஷ்ணர் வேஷம் போட்டு வீட்டுக்குள்ள வராரு இத பாத்த ரோகினி தன்னை மறந்து க்ரிஷ கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்குறாங்க.. எல்லாருமே ஷாக்கா பாக்குறாங்க..