சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவை பாராட்டிய குடும்பம்..! அப்படி என்ன செய்திருப்பார் மீனா.?

bharvathi (2) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஆகஸ்ட் 23]கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மீனா முத்துவுக்காக மணக்க மணக்க கறி குழம்பு செய்றாங்க.. ஸ்ருதி வீட்டுக்குள்ள வராங்க குழம்பு வாசனையை பாத்துட்டு நேரா கிச்சனுக்குள்ள போறாங்க.. மீனா என்ன  விடே மணக்குது அப்படி என்ன செஞ்சிருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. மீனாவும் சிக்கன் குழம்பு செஞ்சிருக்கிறேன் சொல்றாங்க. டேஸ்ட்  ரொம்ப சூப்பரா இருக்கு.. இப்போ எல்லாருமே சாப்பிட உட்காருகிறார்கள். சிக்கன் குழம்பு சாப்பிட்டு எல்லாருமே ரொம்ப மீனாவை பாராட்டி தள்றாங்க.. விஜயா மட்டும் குறை சொல்ல ஆரம்பிக்கிறாங்க சிக்கன் ரொம்ப உப்பா இருக்கு அப்படின்னு.. உடனே ஸ்ருதி ஆன்ட்டி உங்களுக்கு அப்ப உடம்புல ஏதாவது பிரச்சனையா இருக்க போது போய் செக் பண்ணுங்கன்னு சொல்றாங்க. விஜயாவும் பயந்துகிட்டு இல்ல இல்ல இப்ப சாதத்தோடு சாப்பிடும் போது கரெக்டா இருக்குது அப்படின்னு சொல்லி சமாளிச்சுடறாங்க.

மனோஜ் அம்மா லெக் பீஸ் இருந்தா வைங்க அப்படின்னு சொல்றாரு  விஜயாவும் என்னடா.. கால் கடுக்க நின்னு வேலை பாக்குற இந்த அப்படின்னு  பாத்திரத்தில் இருக்கிற எல்லாத்தையுமே மனோஜ்க்கும்  ரோகிணிக்கும் வச்சிர்றாங்க மொத்தமா குழம்பு பாத்திரத்தையே காலி பண்ணிறாங்க .இப்போ அண்ணாமலை விஜயா கிட்ட சொல்றாரு நீ குறை சொல்லிக்கிட்டே இவ்ளோ சாப்பிடுற புடிச்சிருந்தா சட்டியவே  சாப்பிட்டு இருப்ப அப்படின்னு கிண்டல்  அடிக்கிறாரு .ஸ்ருதி மீனா கிட்ட நீங்க சாப்டீங்களா அப்படின்னு கேக்குறாங்க.. சாரி மீனா எல்லாமே தீர்ந்துடுச்சு நான் வேணா உங்களுக்கு ஆர்டர் பண்ணவா அப்படின்னு கேக்குறாங்க உடனே மீனா சட்னி இருக்கு சாப்பிடுகிறேன்னு சொல்லுறாங்க .. ஒரு பக்கம் மீனா முத்துக்காக காத்துட்டு இருக்காங்க. ஒரு வழியா முத்துவும்  வந்துட்டாரு. மீனா கிட்ட ஒரு பாக்ஸ் கொடுத்து  உனக்கு தான் அப்படின்னு சொல்றாரு .

vijaya,meena (1) (1)

நான் உன் மேல கோவப்பட்டது தப்பு தான்,  உன் தம்பி மேல கூட எனக்கு கோவம் இல்லை ஒரு டைம்ல மாமா மாமா என்று பின்னாடியே சுத்துவான் எனக்கும் அவனை  ரொம்ப பிடிக்கும். ஆனா இப்ப அவனோட கெட்ட சகவாசம் என்ன பண்றதுன்னு சொல்லிட்டு இருக்காரு.. அவனுக்கும் எனக்கும் இருக்கிற பிரச்சனைல்ல ஒன்ன இழுத்திருக்கக் கூடாது .அக்கா தம்பி குள்ள பாசம் இருக்க கூடாதுன்னு சொல்ல நான் யாரு ..இனிமே  எதுவுமே சொல்ல மாட்டேன் அது தப்புன்னு  இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் அப்படின்னு சொல்றாரு. இத கேட்டு மீனா கண்ணுல ஆனந்த கண்ணீர் வருது முத்து கையை புடிச்சிட்டு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலங்க .. அப்படின்னு சொல்றாங்க .சரி வா பசிக்குது சாப்பிட போலாம்னு கூப்பிடறாரு. இப்போ ரவி வந்து சாரிடா முத்து. எதுக்குடா அப்படின்னு முத்து கேக்க அண்ணி இன்னைக்கு சிக்கன் குழம்பு சூப்பரா செஞ்சுருந்தாங்க.

சுருதி கூட நான் சண்டை போட்டு இருந்தேன் சரி வெளிய கூட்டிட்டு போயி சமாதானப்படுத்திடலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள அண்ணி வச்ச குழம்பு அவ மைண்டை மாத்திடுச்சு ..இப்ப முத்து  சொல்றாரு ஏண்டா  எனக்காக ஒரு கிண்ணத்துல கூட எடுத்து வைக்கலயா .. ஆனா மீனா முத்துக்காக தனியா எடுத்து வச்சிருக்காங்க .இப்ப   மீனா அத போய் எடுத்துட்டு வந்து சாப்பாடு பரிமாறுறாங்க சிக்கன் குழம்பு சாப்பிட்டு முத்து பாராட்டி தள்ளிடுறாரு..  இதை எல்லாத்தையும் விஜயா ஓரமா நின்னு பாத்துட்டு இருக்காங்க.. மீனா அவங்க கிட்ட அந்த அல்வாவை கொடுத்து அத்தை  அல்வா அன்னைக்கு கேட்டீங்கல்ல நல்லா இருக்குது சாப்பிடுங்கன்னு கொடுக்குறாங்க.. விஜயா முறைச்சுட்டு போயிடுறாங்க .

muthu,meena (7) (1)

இப்ப மனோஜ் வீட்டுக்குள்ள வராரு அப்போ கட்டில் கால் இடுச்சுறுது  அம்மானு கத்துறாரு .. விஜயா வந்துடறாங்க என்ன ஆச்சுன்னு கேட்கவும் கட்டில் இடிச்சிடுச்சுன்னு சொல்றாரு .இப்ப பார்வதியும் வராங்க ..மனோஜ்க்கு என்ன ஆச்சுன்னு கேட்கவும் கட்டில் கால் இடிச்சிடுச்சுன்னு சொல்றாங்க. உடனே விஜயா அச்சச்சோ அப்படி ஆகக்கூடாது அப்படின்னு சொல்லவும் என்ன சொல்றீங்க ஆன்ட்டி ஜோசியர் வேற டைம் சார் இல்லைன்னு சொன்னாரு அம்மா  நம்ம போய் ஜோசியரை பார்க்கலாம் ஏதாவது பரிகாரம் இருந்தா பண்ணலாம் அப்படின்னு விஜயாவ  கூப்பிடறாங்க .விஜயா உடனே டேய் அடிபட்டா டாக்டர்கிட்ட  தான்டா போய் பாக்கணும் இருடா அப்படின்னு சொல்றாங்க..

ஏன் கட்டில்  இங்க கிடக்கு அப்படின்னு பார்வதி விசாரிக்கிறாங்க விஜயா மீனா கூப்பிட்டு திட்டி எல்லாம் இவங்க வேலைதான் அப்படின்னு சொல்றாங்க.. கட்டில் தூக்கி வெளியில போடுங்க அப்படின்றாங்க ..நாங்க மாடில ரூம்  கட்டினதும் தூக்கி போட்டுருவோம் அத்தை அப்படின்னு சொல்லிடறாங்க.. இப்போ  முத்து மனோஜ கிண்டல் அடிச்சிட்டு இருக்காரு ..ஏன் கண்ண பொரடிலையா வச்சிருந்தா எங்கே அடிப்பட்டுச்சு அப்படின்னு கேட்கவும் இந்த காலு அப்படின்னு மனோஜ்  சொல்லவும் முத்து வேகமா அந்த காலை பிடிச்சு  தூக்குறாரு இதை விஜயா பாத்துட்டு  டேய் அப்படின்னு சொல்லி தடுக்குறாங்க..இதோட  இன்னைக்கு  எபிசோட் முடிந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்