விஜய் சார் கேரவனுக்கே போகமாட்டாரு! அந்த சீக்ரெட்டை உளறிய கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடிகை கீர்த்தி சுரேஷ், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட அவர் விஜய் பற்றி பேசியுள்ளார். பேட்டியில் கலந்து கொண்ட அவரிடம் தொகுப்பாளர் ஒரு சில நடிகர்கள் புகைப்படத்தை காட்டி பெஸ்ட் டான்சர் யார் என்று கேட்டார்.
அந்த கேள்விக்கு பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ் ” விஜய் சார் நடனத்தை பற்றி நான் சொல்லியே தெரிய வேண்டாம். அவருடன் நான் நடிக்கும் போது நடனம் ஆடுவதற்கு ஒத்திகை பார்ப்பேன். ஆனால், விஜய் சார் அதெல்லாம் பார்க்கவே மாட்டார். ஒரு சின்ன டேக் நடனம் ஆடிவிட்டு நான் கேரவனுக்கு சென்றுவிடுவேன். அந்த அளவுக்கு கொஞ்சம் சோர்வாக இருக்கும்.
ஆனால், விஜய் சார் அப்படி செய்யமாட்டார் கேரவனுக்கு கூட போகவே மாட்டார். அவர் நடனம் ஆடுவதற்கு ஒத்திகை செய்து நான் பார்த்தது கூட இல்லை. கேரவனுக்கு கூட செல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்து கொண்டு அப்படியே எப்படி ஆடினால் சரியாக இருக்கும் என யோசித்து கொண்டு இருப்பார். பின் கொஞ்ச நேரத்திலே டேக் சொல்லிவிட்டு நடனம் ஆடியும் முடித்துவிடுவார். முதல் முதலாக மகாநதி படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என விஜய் தான் கூறினார் ” எனவும் விஜய்யை பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025