விமல் இஸ் பேக்! வெற்றிமாறன் வழங்கும் ‘சார்’ டீசர் இதோ!

சார் டீசர் : நடிகர் விமல் கடைசியாக துடிக்கும் கரங்கள் படத்தில் நடித்து இருந்த நிலையில், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விமல் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சார் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் விமலுடன் சாயாதேவி கண்ணன், சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் வழங்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.
கமர்ஷியல் கதையம்சத்தை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் டீசர் இன்று வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ட்ரைலரில் வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாக இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.
டீசர்…
விமர்சனம்
டீசரில், வரும் காட்சிகள் எல்லாம் கிராமத்தில் நடக்கும் காட்சிகளை போலவே இருப்பதால் கண்டிப்பாக நல்ல கமர்ஷியல் படமாக சார் அமையும் எனவும், இந்த படத்தில் விமலை பார்க்கும்போது வகைசூடவா படம் நினைவுக்கு வருகிறது எனவும் கூறி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025