காவல் துறையினரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி!

சினிமா உலகில் பாடகியாக இருந்தவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரும்பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால் இவருக்கு டப்பிங் யூனியனில் ராதாரவியால் தடை போடப்பட்டது.
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த கொடுமைக்காக தமது கருத்தை தெரிவித்திருந்தார்.
அதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆலான பெண் ஒருவர் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்ற போது அவர்கள் தங்கள் ஆசைக்கு இனங்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த சம்பவத்தில் அந்த பெண் அளித்த புகார் தவறானது என தெரியவந்ததும் அந்த காவல் துறையினரிடம் சின்மயி மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.