பாலிவுட் ராப்பரும் பிரபல பாடகருமான ஹிர்தேஷ் சிங் எனும் யோ யோ ஹனி சிங் தமிழில் எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை படித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியிலும் பிரபலமானவர். யோ யோ ஹனி சிங், தற்போது புதிய பாடலை ‘யாய் ரே’ ( Yai Re) எனும் புதிய ஆல்பம் பாடல் ஒன்றிற்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடல் கடத்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியானது. பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலை விளம்பரப் படுத்துவதற்காக யோ யோ ஹனி சிங் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது, சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் ஆடி R8 கார் வைத்திருந்தபோது நம்பர் பிளேட்டிற்கு 28 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். என்னிடம் R8 இருந்தது எனவே அதே நம்பரில் என்னுடைய கார் நம்பர் பிளேட் இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்.
எனவே, மகாராஷ்டிராவில் இருந்து R8 என்ற எண்ணில் 28 லட்சம் ரூபாய் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கினேன். என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு தனது அனைத்து கார்களையும் விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…