28 லட்சம் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய பாடகர் யோ யோ ஹனி சிங்.!

Default Image

பாலிவுட் ராப்பரும் பிரபல பாடகருமான ஹிர்தேஷ் சிங் எனும் யோ யோ ஹனி சிங் தமிழில் எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை படித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியிலும் பிரபலமானவர்.  யோ யோ ஹனி சிங், தற்போது  புதிய பாடலை ‘யாய் ரே’ ( Yai Re) எனும் புதிய ஆல்பம் பாடல் ஒன்றிற்கு இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் கடத்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியானது. பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலை விளம்பரப் படுத்துவதற்காக யோ யோ ஹனி சிங் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது, சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் ஆடி R8 கார் வைத்திருந்தபோது நம்பர் பிளேட்டிற்கு 28 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன்.   என்னிடம் R8 இருந்தது எனவே அதே நம்பரில் என்னுடைய கார் நம்பர் பிளேட் இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்.

எனவே, மகாராஷ்டிராவில் இருந்து R8 என்ற எண்ணில்  28 லட்சம் ரூபாய் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கினேன்.  என்று அவர் கூறினார்.  மேலும் பேசிய அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு தனது அனைத்து கார்களையும் விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்