பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் தொடங்கி 50 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் சண்டைகள் முதல் கலகலப்பு வரை பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. வீட்டிற்குள் இருக்கும் கூல் சுரேஷ் லிப் -ஸ்டிக் போட்டுவிட்டு காமெடிகளை செய்து அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.
இதனையடுத்து, பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா பேட்டி ஒன்றில் கூல் சுரேஷை தாக்கி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கூல் சுரேஷ் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளாமல் ஒரு ஆண் மனிதர் எப்படி இருப்பாரோ அதே போலவே இருந்தால் அவருக்கு இன்னும் அதிகமாக வரவேற்பு கிடைக்கும். அப்படி இல்லை என்றால் (cross-dresser) குறுக்கு அலங்காரம் செய்பவர் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு அவர் விளையாடினாள் அவருக்கு பெரிய வரவேற்பு வரும்.
Cool Suresh : விளையாட்டு தனமாக தான் பண்ணேன் விபரீதம் ஆயிட்டு! கூல் சுரேஷ் குமுறல்!
ஆனால், அவர் அதனை செய்யாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் பொய்யான வாழ்கை தான் வாழ்ந்து வருகிறார். எந்த பையனாவது கண்களில் கண்மை உதட்டை லிப்ஸ்டிக் போடுவார்களா? கூல் சுரேஷ் போட்டு வைக்கிறார். எனக்கு தெரிஞ்சி அம்மாவை மதிக்கும் பையன் ரொம்பவே வெட்கப்பட்டு கொண்டு தான் காலில் மருதாணி வைத்துக்கொள்வார்கள். ஆனால், கூல் சுரேஷ் செய்வது சற்று ஒரு மாதிரி இருக்கிறது. சிலர் நினைக்கலாம் அவர் விளையாட்டு தனமாக இப்படி செய்யலாம் என்று.
ஆனால், ஒரு முறை வேண்டுமானால் விளையாட்டு தனமாக இப்படி செய்யலாம் எல்லா நேரமும் இப்படி செய்வது என்னை பொறுத்தவரை தவறு. வீட்டிற்குள் ஐஸூ ஒரு முறை மீசை வரைந்துகொண்டாள் அதன் பிறகு தினமும் வரைந்துகொண்டாளா? இல்லை எனவே, விளையாட்டு வேறு வேண்டும் என்றே செய்வது வேறு. அவர் தலையில் வைத்துக்கொள்ளும் அந்த போட்டு சாமியை வணங்கி வைத்துக்கொள்ளும் போட்டு இல்லை.
அவர் வைக்கும் போட்டு மேக்கப் மேன் வைத்திருக்கும் பொட்டு. இதனை வைத்து பார்த்தால் அவருக்கு அலங்காரம் பிடித்திருக்கிறது. எனக்கு தெரிந்து அவர் ஒரு டிரான்ஸ் என்று நான் நினைக்கிறன்” என கூல் சுரேசை கடுமையாக விமர்சித்து சுஜித்ரா பேசியுள்ளார். இதனை பார்த்த பலரும் ஒருவரின் பாலினம் பற்றி எப்படி இப்படி பேசுறீங்க என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…