சென்னை : சுசி லீக்ஸ் புகைப்படங்களை த்ரிஷாவே கொடுத்ததாக பாடகி சுசித்ரா குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டில் பெரிய அளவில் சர்ச்சைக்குரிய விஷயமாக வெடித்த பிரச்சினை என்றால் ‘சுசி லீக்ஸ்” பிரச்சனையை கூறலாம். ‘சுசி லீக்ஸ்” என்ற பெயரில் பிரபல பாடகியான சுசித்ரா பல பிரபலங்களுடைய சீக்ரெட்டான் புகைப்படங்களை வெளியீட்டு அந்த சமயம் பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இதன் காரணமாகவே, பாடகி சுசித்ராவுக்கு சினிமாத்துறையில் பின்னடைவு ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் பாடல்களை படாமல் இருந்த சுசித்ரா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் கலந்து கொண்ட இவர் தனுஷ், கார்த்திக் குமார் ஆகியோரையும், பயில்வான் ரங்கநாதன் பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசியது பேசும் பொருள் ஆகி உள்ளது. அந்த பேட்டியில் அவர் நடிகை த்ரிஷாவையும் விட்டு வைக்க வில்லை. த்ரிஷா பற்றியும் பேசி இருக்கிறார். அதில் பேசிய சுசித்ரா ” சுசி லீக்ஸ் என்ற பெயரில் வெளியான அனைத்து புகைப்படங்களும் த்ரிஷா தான கொடுத்தவை.
ஆனால், அந்த புகைப்படங்கள் வைரலான பிறகு, த்ரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் நான் ரொம்பவே வேதனை அடைந்துவிட்டேன்” என்று ட்வீட் போடுகிறார். இதெல்லாம் அவுங்க எல்லாரும் கும்பலாக செய்த வேலை அதில் த்ரிஷாவும் உண்டு. ஒரு முறை த்ரிஷா என்னிடம் அவருடைய தனிப்பட்ட புகைப்படத்தை வெளியிட சொல்லி அதை பிராங்கிற்காக இதனை செய்தேன் என்று கூறினார்” எனவும் பாடகி சுசித்ரா ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…