SilambarasanTR bhavatharini [File Image]
இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மறைந்த பாடகி பவதாரிணி கடைசியாக சிம்பு நடிப்பில் யுவன் இசையில் வெளியான மாநாடு படத்தில் இடம்பெற்று இருந்த “மெஹெரெசிலா” பாடலை பாடி இருந்தார். இவர் பாடிய இந்த பாடலில் அவருடைய குரல் சிறிது நிமிடங்கள் மட்டுமே வரும். ஆனால், இந்த பாடல் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது என்றே கூறலாம்.
மனம் பதைக்கிறது! பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!
இதனையடுத்து, பவதாரிணி மறைவுக்கு நடிகர் சிம்பு தனது இரங்கலை தற்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “மெஹெரெசிலா” பாடலை வெளியீட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” அப்பாவித்தனத்திற்காகவும் அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல் நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள் சீக்கிரம் சென்றுவிட்டார்.
இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் யுவன் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் இக்கணத்தில் நிம்மதியாக இருங்கள் பவதாரிணி” என உருக்கமாக தனது இரங்கலை சிம்பு தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…