சர்காரை குடைந்த சிம்டாங்காரன் பாடல் அர்த்தம்…இதோ வெளியிட்ட பாடலாசிரியர்..!!

Default Image

சர்கார் படத்தில் அர்த்தமே புரியல என்று கூறப்பட்ட சிம்டாங்காரன் பாடலில் இடம்பெற்ற வரிகளுக்கான அர்த்தத்தை  பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிய படம் சர்கார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் இசை அமைப்பாளார் AR ரகுமானின் இசையில் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய முதல் பாடலாக சிம்டாங்காரன் என்ற பாடல் முதலாவதாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் எழுந்தது.

அப்போது ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலளித்திருந்த பாடலாசிரியர் விவேக் நான் விமர்சனங்களிலிருந்து விலகி ஓடுபவன் இல்லை. இந்த பாடலை ட்ரோல் செய்கிறவர்களை என்னால் புரிந்துகொள்ள நன்றாக முடிகிறது.மேலும் இந்த பாடல் எதனால் படத்தில் இடம்பெறுகிறது என்பதை படத்தை பார்த்தபின்பு உங்களுக்கே தெரியவரும்.

இந்நிலையில் பாடலுக்கான முழு அர்த்தத்தையும் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் வெளியிட்டிருக்கிறார்.அதில் சிம்டாங்காரன் என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே. அந்த ஒருவன். நம் சிம்டாங்காரன் என்று விமர்சித்தவருக்கு விவேக் விளக்கம் என்று கூறியுள்ளார்.படம் நவ.6 அன்று தீபாவளிக்கு வெளியாகுவது குஈப்பிடத்தக்கது.

 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்