Simran: நடிகை சிம்ரனுக்கு முதல் இந்தி படம் தோல்வியடைந்து விட கோலிவுட்டில் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் கை கூடி வந்த கதை.
90-ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அந்த அளவிற்கு அவர் அனைத்து மொழி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டாலும் கூட அவருக்கு பெரிய அளவில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் வருவதில்லை.
சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பெண், மும்பையில் கல்வியை முடித்தார். படிக்கும் போதே, மாடலிங் மீது ஆர்வம் உண்டு. அந்த காலகட்டத்தில் பாலிவுட் சினிமாவில் அவ்வளவு சீக்கிரம் உள்ளே நுழைய முடியாது. இப்பவும் நுழைய முடியாது, அப்போது ரொம்ப பயங்கர காம்பெடிஷனாக இருந்தது.
இந்த நிலையில், 90ஸ் காலகட்டத்தில் ப்ரோகாஸ்ட் போன்று ஒரு பிரபல ஹிந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சிம்ரன். அந்த நிகழ்வை பார்க்காமல் யாருமே தூங்க மாட்டார்களாம், அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தது.
இந்த ப்ரோக்ராமை தொடர்ந்து இந்தி படத்தில் நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கிடைத்த முதல் வாய்ப்பு அதாவது முதல் படம் தோல்வியடைகிறது, அதனை தொடர்ந்து இரண்டாவது படமும் படுதோல்வி அடைகிறது. இத்துடன் சிம்ரன் அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யபடவில்லை.
அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் பெரியதாக நடிக்க வர மாட்டார்கள். இப்போ இருப்பது போல் கேரளாவில் இருந்து நடிகைகள் அப்போது யாரும் அதிகமாக வந்ததில்லை. அந்த சமயத்தில், மாடலிங் ஆர்டிஸ்ட்கள் பாம்பையில் இருந்து இறக்கினார்கள். அப்போது, சினிமா ப்ரோக்கர்கள் ஆல்பம் மூலமாக மாடலிங் ஆர்டிஸ்ட்களை ஓகை செய்தனர்.
அதில், சிம்ரன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது, அவரது முகத்தோற்றம் சவுத் இந்தியன் போல் முகம் பாவனையும் வசீகரம் கொண்டு இருந்ததால், அந்த சமயத்தில் இரண்டு தமிழ் படங்களில் கமிட்டாகி விடுகிறார். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்ற கதைபோல், அந்த இரண்டு படத்திலும் நடிப்பதற்கு அட்வான்ஸ் கொடுத்து ஓகே செய்து முதலில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஒன்ஸ்மோர்’ படமும் ‘விஐபி’ என்ற படத்திலும் நடிக்க தொடங்கினார்.
இந்த இரண்டு படமும் மிகப்பெரிய திரைப்படம், இரண்டு பட படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடக்கிறது. ஆனால், இதில் முதலில் ரிலீஸ் ஆனது விஐபி படம். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆனது. அதில் டான்ஸ் ஆடும் சிம்ரன் மிகப்பெரிய ட்ரெண்டிங் ஆனார். அதேபோல், ஒன்ஸ்மோர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…