Simran : விஜயுடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவர்க்கும் தெரியும். பல நடிகைகளும் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறி இருப்பதை நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பல நடிகைகள் பாடல்களில் நடனம் ஆடினால் கூட அவருக்கு இணையாக பெரிய அளவில் நடிகைகள் நடனம் ஆடியது இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், சிம்ரன் மட்டும் தான் விஜய்க்கு இணையாக நடனம் ஆடி இருக்கிறார்.
குறிப்பாக ஆல்தோட்ட பூபதி பாடலில் விஜய் எந்த அளவிற்கு நடனம் ஆடினாரோ அதை அளவிற்கு சிம்ரனும் அசத்தலாக நடனம் ஆடி இருப்பார். அவருடைய நடனத்தை பார்த்து விஜயையே ஆச்சரியம் அடைந்து எனக்கு இணையாக நடனம் ஆடிய நடிகை சிம்ரன் தான். தனக்கு பிடித்த நடிகையும் சிம்ரன்தான் என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு சிம்ரனை விஜய்க்கு ரொம்பவே பிடிக்கும்.
விஜய் கூட நடனம் ஆட மற்ற நடிகைகள் தான் கடினம் என்று சொல்கிறார்கள் என்றால் சிம்ரனும் அதை தான் சொல்கிறார். பேட்டி ஒன்றில் பேசிய சிம்ரன் ” என்னுடைய திறமை எல்லாம் நடனம் மூலம் தான் வெளியே வந்தது. குறிப்பாக ஆல்தோட்ட பூபதி பாடலில் நடனம் ஆடியது பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அப்போது மட்டுமில்லை இப்போது வரை அந்த பாடலை கொண்டாடடி வருகிறார்கள்.
இந்த பாடலை நான் தியேட்டரில் பார்க்கும்போது பாடலின் சவுண்ட் கேக்கவே கேக்காது ரசிகர்களின் சத்தம் தான் கேட்கும். அந்த பாடலில் பெண்கள் பாடும் படி வரிகள் வராது. ஆண் மாட்டும் தான் பாடுவது போல வரும். இருந்தாலும் அந்த பாடல் எனக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. விஜய் கூட நடனம் ஆடுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அவருடன் நடனம் ஆடுவது ரொம்ப கஷ்டம். அவர் மிகவும் சிறப்பாக நடனம் ஆடுவார். அவருக்கு இணையாக நடனம் ஆட சவாலாக இருந்தது” எனவும் சிம்ரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…