சிம்டாங்காரன்னா இதன் அர்த்தமா…! விளக்கமளிக்கும் விவேக்….!!!
சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் 2 பாடல்களை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இசை வெளியீட்டு விழாவிலே விவேக் அவர்கள் பேசுகையில், சிம்டாங்காரனுக்கு அர்த்தம் கூறினார்.
அவர் கூறுகையில் , யாரை பார்த்தால் கண் சிமிட்டாமல் பார்க்க தோணுக்கிறதோ, அவர்கள் தான் சிம்டாங்காரன் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கூறுகையில், இது பாடலுக்கு அர்த்தம் கூறும் நேரமல்ல, எனவே இன்னொரு நாள் முழு பாடலுக்கும் அர்த்தம் கூறுவதாக கூறியுள்ளார்.