#17YearsOfVallavan: பல்லனாக அபார நடிப்பு…17 வருடத்திற்கு முன்பே வசூல் நாயகன் என்று நிரூபித்த சிம்பு!

17YearsofBBVallavan

நடிகர் சிலம்பரசன் சிம்பு இயக்கி, அவரே நடித்துள்ள ‘வல்லவன்’ திரைப்படம் 2K கிட்ஸ்களுக்கு ஒரு ஃபேவரைட்டாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். சிம்புவின் யுனிக் படங்களின் ஒன்றான ‘வல்லவன்’ படம் 2006ஆம் ஆண்டு 13ம் தேதி இதே நாளில் வெளியாகி இன்றோடு 17 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

குறிப்பாக, இப்படத்தில் வரும் ஸ்கூல் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. படத்திலுள்ள லூசு பெண்ணே, எம்மாடி ஆத்தாடி பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. இந்த படத்தில் ரீமா சென் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், சந்தியா , சந்தானம் , பிரேம்ஜி மற்றும் சத்யன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் வசனத்தை பாலகுமாரன் எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மன்மதன் படத்துக்கு பிறகு சிம்புவின் 2வது சிறந்த வெற்றி திரைப்படமாக இது அமைந்தது.

ராக்கி பாயை அலற விடப்போகும் லியோ தாஸ்! கேரளாவில் முரட்டு சம்பவம் லோடிங்!

சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும், பின்னர் திரை துறையில் அணைத்து துறையிலும் சிறந்த விளங்க தொடங்கினார். அந்த காலகட்டத்தில், 2K காலகட்டத்தில் மன்மதன் படத்திற்கு பின்பு வல்லவன் படம் பெயரையும் புகழையும் தேடி தந்தது.

படத்தில், பள்ளி மாணவனமாக வரு சிம்பு முதலில் ரீமா சென்னை காதலித்து சண்டையில் முடிந்து பிறகு, பல்லனாக ஆசிரியையாக வரும் நயன்தாராவை காதலிக்கும் முக்கோண காதல் கதை 2K கிட்ஸ் மத்தியில் மிக பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தில், பல்லனாக கண்ணாடி போட்டுகொண்டு வரும் கதாபாத்திரம் சிம்பவுக்கு மிவும் பொருத்தமாக அமைந்திருக்கும்.

Leo Fourth Single: அக்டோபர் 16ம் தேதி சம்பவம் உறுதி.! ‘லியோ’வின் 4வது சிங்கிள் அப்டேட்…

இன்றும் கூட இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும், டயலாக்களும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம், மாநாடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரூ.100 கோடி வசூல் செய்து வசூல் நாயகனாக மாஸ் காட்டிய சிம்புவின்  அப்போவே வல்லவன் திரைப்படம் நல்ல வசூல் செய்துள்ளது.

imdb தகவளின்படி, சுமார் ரூ.25 கோடியில் எடுக்கப்பட்ட வல்லவன் திரைப்படம் அப்போவே ரூ.30 வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சினிமா விமசகர்கள் கூற்றின்படி, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் மட்டும் 25 கோடி ரூபாய் செய்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்