சிம்பு நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் காலை 8 மணிக்கு வெளியானது. இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் மேனன் , கலையரசன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே,படத்திலிருந்து வெளியான பாடல்கள் டிரைலர் என வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாக்கிய நிலையில், படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களும் திரையரங்கிற்கு சென்று கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
படத்தை பார்த்த ஒருவர் ” பத்து தல படம் அருமை. சிம்பு நடிப்பு அருமையாக இருக்கிறது. சில சிறந்த திருப்பங்களால் நிரப்பப்பட்டது. 2வது பாதியில் ஸ்டண்ட் கோரியோகிராஃபி அது சொந்த கூச்சலுக்கு தகுதியானது.
கௌதம் கார்த்திக் கதாபாத்திரம் அவ்வளவு அருமையாக இருக்கிறது” என 3.75/5 என ரேட்டிங் கொடுத்துள்ளார்.
மற்றோருவர் பத்து தல படம் சுமாராக இருக்கிறது எனவும், கெளதம் கார்த்திக் அருமையாக நடித்திருக்கிறார் எனவும்” கூறியுள்ளார்.
மற்றோருவர் ” பத்து தல படம் அருமையாக இல்லை. BGM-ஐ ரசிக்க எதுவும் இல்லை. 2 பாடல்கள் குட், மேக்கிங் குட் அல்ல. மோசமான திருத்தங்கள். குட் டயலாக்ஸ். இரண்டு STR காட்சிகளைத் தவிர, இது ஒரு மொத்த ஏமாற்றம்” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” பத்து தல சராசரி முதல் பாதி சராசரி 2-வது பாதி கீழே மஃப்டியின் மோசமான ரீமேக். ஹீரோ கௌதம் கார்த்திக் சிறப்பாக செய்துள்ளார். சயீஷா ஐட்டம் டான்ஸ் பாடலால் மட்டுமே இந்தப் படத்தை காப்பாற்ற முடியும்” என 2/5 ” என ரேட்டிங் கொடுத்துள்ளார்.
விமர்சனத்தை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என தெரிகிறது. படத்திற்கான முன் பதிவிலே டிக்கெட் அனைத்தும் விற்கப்பட்டு தீர்த்தத்தால் படத்தின் ஓப்பனிங் வசூலும் அருமையாக இருக்கும் என தெரிகிறது. எனவே படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…