நடிகர் சிம்பு தற்போது வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். மேலும் படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் மகத் மற்றும் நடிகை கேத்ரின் தெரேசா, மேகா இவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.மேலும் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தங்கள் ஹூரோவை திரையில் பார்ப்பதில் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே நடிகர் சிம்புவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடிகர் சிம்பு நடித்தார் ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திரும்பக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இவர் அளித்த இந்த புகாரால் நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது.எத்தனை சோதனைகளை தந்தாலும் நடிகர் சிம்புக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சிம்பு ரசிகர்கள் ஆதரவாக இருப்பதாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.
இதுகுறித்து இதனால் யாரும் பதற்றப்பட வேண்டாம்.மேலும் யாரையும் குறிவைத்து விமர்சிக்கவும் வேண்டாம் எனக்கும் எப்போதும் அன்பை கொடுங்கள் மேலும் என் மீதான உங்களது தொடர் அன்பு மற்றும் ஆதரவுக்கும் நன்றி மேலும் நீங்கள் இல்லாமல் சிம்பு இல்லை நாம் எல்லோரும் நமது கடமையைச் செய்வோம் அது தானாகவே ஒரு வழி பிறக்கும்.இந்த பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம் என்று கூறினார் சிம்பு.
இந்நிலையில் தற்போது வந்தா ராஜாவாதான் வருவேன் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் மஹத் லைவ் வந்தார்,ஆனால் நேற்றே சிம்புடன் லைப் வர்ரேன் நீங்க தயாரா.. என்று கேட்டார் இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்தார்.ரசிகர்கள் சிம்புடன் பேசினர் அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் சிம்புவிடம் பாடல்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.இந்த கேள்விக்கு ஒரு சூப்பர் விஷயம் சொல்கிறேன் என்ற சிம்பு எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு என்ற தனது படத்தின் முதல் பாடல் வரியை கூறினர்.இந்நிலையில் படத்தின் இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்றார்.ஆனால் பாடலை நான் எழுதவில்லை. அதை ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதியிருக்கிறார். ரொம்ப மோசமான பையன்ங்க ஆதி என்று கூறியுள்ளார்.இந்நிலையில் பெரிதும் பேசப்பட்ட ரெட்கார்டு பிரச்சனைக்கு பாடலில் பதிலடி தந்துள்ளார் சிம்பு என்று சினி வட்டாரங்களும் ரசிகர்களும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
DINASUVADU
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…